முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழிந்து வரும் சீனப்பெருஞ்சுவர்

செவ்வாய்க்கிழமை, 30 ஜூன் 2015      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்: சீனப் பெருஞ்சுவரில் சுமார் 30 சதவீதம் சேதமடைந்துவிட்டதாகவும், அக்கறையின்றி செங்கற்களை மக்கள் திருடுவதும் இயற்கை மாற்றமுமே இதற்கு காரணம் என்று பெய்ஜிங் டைம்ஸ் ஆய்வில் தெரிவித்துள்ளது.  யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட சீனப் பெருஞ்சுவர் எவ்வித இடைவெளியும் இன்றி ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் நீளம் கொண்டது. சான்காய்குவானில் இருந்து ஜியாயூகுவான் கோபி பாலைவனம் வரை உள்ளஇந்தச் சுவர் நீண்ட நெடிய தூரம் கொண்ட இது முற்றிலும் மனிதர்களின் உழைப்பால் ஆனது.

கி.மு. 3-ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட சீனப்பெருஞ்சுவரின் கட்டுமான பணிகளில் சுமார் 6,300 கிலோ மீட்டர்கள் 1368 முதல் 1644 காலகட்டத்தில் மிங் வம்சத்தினரால் கட்டப்பட்டது. இதில், 1,962 கிலோ மீட்டர்கள் நீளம் உள்ள இச்சுவரானது பல வருடங்கள் ஆகிவிட்டதாலும், காற்று, மழை போன்ற இயற்கை மாற்றங்களாலும் சேதமடைந்து குறித்து கடந்த 2014-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்தது.

இந்த நிலையில் பெய்ஜிங் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில், "சுற்றுலா மற்றும் உள்ளூர்வாசிகளின் செயல்பாடுகளால் சீனப் பெருஞ்சுவர் பாதிக்கப்பட்டு பெருமளவில் அழிந்துவிட்டது. பழங்கால கற்கள் மற்றும் செங்கற்களால் ஆன கோபுரங்கள் ஒரு மழைக்கு கூட தாங்காத நிலையிலேயே உள்ளது.  வடக்கு மாகாணமான லுலாங்கில் வாழும் மக்கள், வீடு கட்டுவதற்காக சுவரிலிருந்து கற்களை திருடிச் செல்கின்றனர். சீன எழுத்துக்குறிகள் இருக்கும் கற்களை சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்கள் உள்நாட்டு மதிப்பில் 30 யுனான்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

இதை தொடர்ந்து, செங்கற்களை திருடுவோருக்கு அங்கு 5 ஆயிரம் யுவான் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.  சமீப காலமாக இங்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. அவர்களும் அக்கறையின்றி செயல்படுகின்றனர். மேலும் மழை, உப்புக் காற்று போன்ற பல இயற்கை மாற்றங்களால் பாதிப்புகள் ஏற்படுகிறது" என்று பெய்ஜிங் டைம்ஸ் பத்திரிகையின் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து