முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகி நூடுல்சை ஏற்றுமதி செய்ய மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி

செவ்வாய்க்கிழமை, 30 ஜூன் 2015      இந்தியா
Image Unavailable

மும்பை: மேகி நூடுல்சை ஏற்றுமதி செய்ய பம்பாய் உயர் நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்பி சாப்பிடும் உணவாக நூடுல்ஸ் இருந்தது. இந்த உணவுப்பொருளில் சில ரசாயனங்கள் அளவுக்கு அதிகமாக உள்ளது என மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்கள் விற்பனை செய்வதற்கு தடைவிதித்தன.

இதனால் தனதுதயாரிப்புகளை மேகி நிறுவனம் கடைகளில் இருந்து திரும்ப பெற்றதுடன் அந்த பொருட்களை எரித்து அழித்தது.இந்த தகவலை அந்த நிறுவனம் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.மேகி உணவுப்பொருளை நெஸ்லே நிறுவனம் தயாரித்து வருகிறது.  அந்த நிறுவனம் மேகி உணவுப்பொருளை ஏற்றுமதி செய்யலாம் என நேற்று பம்பாய் உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் நீதிபதி வி.எம்.காண்டே மற்றும் பி.பி கோலபா வாலா அனுமதி அளித்தனர்.

இந்த வழக்கில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையகத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் மெகமூத் பிரச்சா ஆஜரானார். நெஸ்லேவின் மேகி உணவுப்பொருள் பாதுகாப்பானதாக இருந்தால் அவர்கள் ஏன் ஏற்றுமதி செய்யவில்லை என அவர் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணைஜூலை14ம்தேதியன்று நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாசகர் கருத்து

1 கருத்துகள்

  1. Anonymous June 30, 23:51

    நாம நல்லாயிருக்கணும்; மத்தவய்ங்க எக்கேடு கெட்டால் நமக்கென்ன? என்ற உயரிய சிந்தனையுள்ளநீதியரசர்கள் நமக்குக் கிடைத்திருப்பது நாம் செய்த புண்ணியம்தான்!

    Reply to this comment
    View all comments

    வாசகர் கருத்து