முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழிசைக்கு, அமைச்சர் தங்கமணி கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 30 ஜூன் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: சென்னை மெட்ரோ ரெயில் துவக்க விழாவில் கலந்து கொள்ளும்படி மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அழைக்கப்பட்டார் என்றும், வெளிநாடு செல்வதால் தன்னால் பங்கேற்க இயலவில்லை என்றும்  அவர் கூறியதாக தமிழக தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி கூறி இருக்கிறார்.

வாய்க்கு வந்ததை தனது கருத்தாக பேட்டி அளிப்பதை வாடிக்கையாக கொண்ட தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்  ‘நாகாக்க’ வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டிருக்கிறார். அமைச்சர் பி.தங்கமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதலமைச்சர்  ஜெயலலிதா நேற்றுமுன்தினம், கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான 10.15 கிலோமீட்டர் உயர்த்தப்பட்ட வழித்தடத்தில் சென்னை மெட்ரோ ரயிலின் பயணிகள் சேவையை துவக்கி வைத்தார்கள்.   அந்த நிகழ்விலேயே, முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை மெட்ரோ இரயிலின் கோயம்பேடு பணிமனை மற்றும் கோயம்பேடு, சென்னை புறநகர்ப் பேருந்து நிலையம் (சிஎம்பிடி), அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல் மற்றும் ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையங்களையும் துவக்கி வைத்தார். மெட்ரோ இரயில் தொடக்க விழாவைப் பற்றி தமிழக பிஜேபி கட்சித் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அளித்துள்ள பேட்டி பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது.

எந்தப் பொருள் பற்றியும் முழுவதுமாக எதையும் தெரிந்து கொள்ளாமல் அரைவேக்காட்டுத்தனமாக பேட்டிகள் அளிப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்.  அந்த வகையிலேயே மெட்ரோ இரயில் தொடக்க விழா பற்றிய அவரது பேட்டி அமைந்துள்ளது.  அந்தப் பேட்டியில், மத்திய மந்திரிகளை விழாவுக்கு அழைத்திருக்கலாம்.

இந்த ஆட்சியில் எதுவுமே ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என்று கூறியுள்ளார்.   ஐந்தாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பு வகிக்கும்  முதல்வர்  ஜெயலலிதாவுக்கு ஜனநாயக வழிமுறைகளும் தெரியும்; அரசு நிர்வாகமும் தெரியும்; அரசு மரபுகளும் தெரியும்; அரசு நடைமுறைகளும் தெரியும்.  எந்த ஒரு அரசு விழாவிற்கும் முறைப்படி யாரை எப்படி அழைக்க வேண்டும் என்பதும் முதலமைச்சருக்கு  நன்றாகத் தெரியும்.  முதலமைச்சர் ஜெயலலிதா இன்றைக்குப் புதிதாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவர்  அல்ல.  ஆட்சி எப்படி அமைய வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துள்ளவரே  முதலமைச்சர்   ஜெயலலிதா தான்.  முறைப்படி எதையும் செய்பவரும்  ஜெயலலிதா தான்.

இவையெல்லாம், ஒரு அரசியல் கட்சியின் மாநிலத் தலைவராக முதன்முறையாகப் பொறுப்பேற்றுள்ள டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு தெரியாது என்றால், தனக்குத் தெரியாத விஷயங்களை அவர் பேசாது இருப்பதே நல்லது ஆகும்.    சென்னை மெட்ரோ ரயிலை இயக்குவதற்கு பெங்களூருவில் உள்ள மெட்ரோ ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் மற்றும் இதர அமைப்புகள் தேவையான ஆய்வுகளை மேற்கொண்டு, சட்டப் பூர்வமான பாதுகாப்பு அனுமதியை இந்த மாதம் வழங்கினர்.   ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுவதால், மெட்ரோ ரெயில் சேவையைத் துவக்கி வைப்பதற்கான அனுமதியை வழங்கும்படி தலைமைத் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தலைமைத் தேர்தல் ஆணையம், சென்னை மெட்ரோ ரெயில் சேவையை ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்தபின் துவக்கி வைக்கலாம் எனவும், ஆனால், அவ்வாறு மெட்ரோ ரெயில் சேவை துவக்கப்படுவது பற்றி, வாக்குப் பதிவு முடியும் வரை எந்த தகவலும் தெரிவிக்கப்படக் கூடாது என்றும் தெரிவித்தது.  எனவே, சென்னை மெட்ரோ ரெயிலின் சேவை 29-ந் தேதி அன்று துவக்கப்பட முடிவெடுத்த போதும், அது குறித்து வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.   சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் மத்திய மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டமாகும்.  மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் இத்திட்டத்திற்குத் தொடர்புடைய துறையாகும்.

எனவே, சென்னை மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை துவக்க விழாவில்  மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் வெங்கையா நாயுடு பங்குகொள்ள வேண்டும் என்பதே முதலமைச்சர் ஜெயலலிதா விருப்பமாகும்.  29-ந் தேதி  அன்று நடைபெறும் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை துவக்க விழாவில் கலந்து கொள்ளும்படி மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் வெங்கையா நாயுடுவுக்கு 16-ந் தேதி அன்று முறையாக அழைப்பு விடுக்கப்பட்டது.

வெங்கையா நாயுடு 28-ந் தேதி  அன்று வெளிநாடு செல்வதாகவும், 11.7.2015 அன்றுதான் இந்தியா திரும்புவதாகவும், எனவே, அதுவரை, இந்தத் திட்டத் துவக்க விழாவை ஒத்திப்போட வேண்டாம் என்றும்,  தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா   தெரிவித்தபடி 29-ந் தேதி அன்றே துவக்க விழாவை நடத்திட வேண்டும் என்றும் வெங்கையா நாயுடு தெரிவித்தார். ஜனநாயக முறை பற்றியும், மரபுகள் பற்றியும் எங்களுக்கு நன்கு தெரிந்துள்ளதால் தான்,  மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் வெங்கையா நாயுடுவை மெட்ரோ இரயில் துவக்க விழாவிற்கு நாங்கள் முறைப்படி அழைத்திருந்தோம். மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் இந்த விழாவில் கலந்து கொள்ள இயலாததால்தான், அந்தத் துறையின் இணைச் செயலாளர் இந்த விழாவில் கலந்து கொண்டார். ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப எந்த ஒரு பொருள் பற்றியும் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் வாய்க்கு வந்ததையே தனது கருத்தாக பேட்டி அளிப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளவர் என்பதை டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்  நிரூபித்துள்ளார்.

யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு என்ற திருக்குறளை டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் நினைவில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து