முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லலித்மோடி விவகாரத்தில் பாஜக அரசுடன் எந்த ஒப்பந்தமும் போடவில்லை காங்கிரஸ் விளக்கம்

புதன்கிழமை, 1 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு சுஷ்மா சுவராஜ் மற்றும் வசுந்தரா ராஜேவை நீக்க வேண்டும் என்று நாங்கள் பா.ஜக அரசுடன்  எந்த வித ஒப்பந்தமும் போடவில்லை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஐபிஎல் கிரிக் கெட் போட்டியின் முன்னாள் தலைவர் அன்னிய செலாவணி முறைகேடு செய்தது தொடர்பாக அவர் மீது வழக்குகள் உள்ளன.இந்த நிலையில் கடந்த 4ஆண்டுகளாகஅவர் லண்டனில் வசித்து வருகிறார். அவரது மனைவி புற்றுநோயால் அவதிப்படுகிறார். அவரை பார்ப்பதற்கு போர்ச்சுகல் நாட்டிற்கு செல்ல பிரிட்டன் பயண ஆவணங்களைலலித் மோடி எதிர் நோக்கினார்.அப்போது அவர்  மனைவியை பார்க்க வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே உதவினார். எனவே, அவர்களை பதவியில் இருந்து விலக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் வலியுறுத்தின.

இந்த நிலையில் இந்த இரு பாஜக தலைவர்களையும் நீக்கினால் நாடாளுமன்றத்தில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை(ஜி.எஸ்.டி) நாங்கள் ஆதரிக்கிறோம் என காங்கிரஸ் தெரிவித்ததாக சில ஊடகங்களில் தகவல்வெளியானது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு துறை தலைவர் ரன் தீப் சுர்ஜேவாலா நேற்று கூறியதாவது, சுஷ்மா சுவராஜவும் வசுந்தரா ராஜேவும் ஐ.பி.எல் போட்டியில் முறைகேடு செய்த  லலித் மோடிக்கு உதவி இருக்கிறார்கள். ஊழல் முறைகேடு செய்துள்ள நபருக்கு உதவி செய்த அவர்களை பதவி நீக்க வேண்டும் என காங்கிரஸ் கூறி வருகிறது.இந்த நடவடிக் கைக்காக நாங்கள் பாஜகவிடம்பேரம் பேசியதாக சில ஊடகங்களில்  தகவல் வந்துள்ளது. இது முற்றிலும் ஆதாரமற்றது. குறும்புத்தனமானது கூட ஆகும். இந்த இரு பாஜக தலைவர்களை பதவியில் இருந்து நீக்கினால் நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.டி மசோதாவை காங்கிரஸ் ஆதரிக்கும் என வெளியாகியுள்ள தகவலில் சிறிதும் உண்மையில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் காங்கிரஸ் குறித்து வெளியான தகவல் முற்றிலும் ஆதாரமற்றது.நாடாளுமன்றத்தில்அரசுடன் காங்கிரஸ் எந்த வித பேரமும் மேற்கொள்ள வில்லை என்றார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற ஜூலை21ம் தேதி துவங்குகிறது.இந்த கூட்டத்தொடரின் போது எதிர்கட்சிகள் பாஜக கூட்டணி அரசுக்கு பெரும் நெருக்கடியைத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே ஆகிய பாஜக தலைவர்களைப்போல மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியும் தனது கல்வித்தகுதி குறித்து தவறான தகவல்களை அளித்துள்ளார். மகாராஷ்டிராவில் பாஜக அமைச்சர் பங்கஜா முண்டே ரூ206 கோடிக்கான கொள் முதலுக்கு எந்த வித டெண்டரும் விடாமல் ஒப்புதல் அளித்தார்.இந்த முறைகேடு குறித்தும் நாடாளுமன்றத்தில் எதிர் கட்சிகள் கேள்வி எழுப்ப உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து