முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை பொதுத்தேர்தலில் போட்டியிடுவேன் :மகிந்தா ராஜபக்‌ஷே உறுதி

புதன்கிழமை, 1 ஜூலை 2015      உலகம்
Image Unavailable

கொழும்பு - இலங்கையில் வருகிற ஆகஸ்ட் மாதம் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.இந்த தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்‌ஷே கூறியிருந்தார்.அவர்ஐக்கிய  மக்கள் சுதந்திரா கூட்டணி சார்பில்   பிரதமர் வேட்பாளராக போட்டியிடமுடியாது என இலங்கையின் தற்போதைய ஜனாதிபதிமைத்ரி பாலா சிறிசேனா திட்டவட்டமாக தெரிவித்தார்.இந்த நிலையில் ராஜபக்‌ஷே தான் தேர்தலில் போட்டியிடப்போவது உறுதி.எதிர் அணியினை வழிநடத்தும் வகையில் நான் தேர்தலில் போட்டியிடுவேன் என்று அவர் நேற்று தெரிவித்தார். மகிந்தா ராஜ பக்‌ஷே தனது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்களுடன் சிலருடன் இருக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

தனது ஆதரவாளர்கள் கோரிக் கையை ஏற்று நான் தேர்தலில் போட்டியிடுகிறேன் என அவர்கூறினார். கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்‌ஷே தோல்வியை தழுவினார்.10ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அவர் இந்த தோல்வியை சந்தித்ததால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இலங்கை பொதுத்தேர்தலில் போட்டியிடப்போவதாக அவர் கூறியுள்ளார். இலங்கையின் தெற்கு மாகாணமான மடமுலானா பகுதியில் ராஜபக்‌ஷே பேசுகையில் தான் தேர்தலில் போட்டியிடப்போவது உறுதி என்றார்.

இருப்பினும் தான் எந்த கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவேன் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை. ராஜபக்‌ஷேவின் அமைச்சரவையில் இருந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சிறிசேனா எதிர் கட்சிகளின் கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்டு ஜனாதிபதி ஆனார். இலங்கை யில் ஆகஸ்ட் மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி சிறிசேனா கடந்த மாதம் அறிவித்தார். சிறிசேனாவும் ராஜபக்‌ஷேவும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். சட்டமன்றத்தில் தனது நிலையை வலுப்படுத்துவதற்காக இந்த தேர்தலை சிறிசேனா அறிவித்துள்ளார்.

சில முக்கிய சீரமைப்புகளை ராஜபக்‌ஷேவின் ஆதரவாளர்கள் எதிர்த்து வருகிறார்கள். எனவே பொதுத்தேர்தலை சிறிசேனா அறிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரம சிங்கே தலைமையிலான ஆட்சி நாட்டின் பாதுகாப்புக்கு அபாயம் விளைவிக்கும் வகையில் செயல்படுகிறது என ராஜபக்‌ஷே குற்றம் சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
வாசகர் கருத்து

1 கருத்துகள்

  1. Anonymous July 1, 23:09

    ரத்த காட்டேரி உனது சகாப்தம் முடித்துள்ள நிலையல் என் சவால் இறைவன் எப்போதும் எமன் பணி செய்பவனை விருபுவேதுது இல்லை

    Reply to this comment
    View all comments

    வாசகர் கருத்து