முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு: தயாநிதி மாறனிடன் சிபிஐ விசாரணை

புதன்கிழமை, 1 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பை முறைகேடாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம் டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கடந்த இரு தினங்களுக்கு முன் பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பை முறைகேடாக பயன் படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, 323 பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளையும், 19 போஸ்ட் பெய்டு செல்போன் இணைப்புகளையும் முறைகேடாக பயன்படுத்தியதாகவும், அதனால் அரசுக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் இழப்பு ஏற்பட்டதாகவும் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இவ்வழக்கு விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகும் படி தயாநிதி மாறனுக்கு சம்மன் அனுப்பிருந்தது. 

அதன்படி நேற்று அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையின் போது தயாநிதி மாறனிடம் 100 கேள்விகளுக்கான பதில்களைப் பெற்றுவிடுவதில் சி.பி.ஐ. அதிகாரிகள் முனைப்பாக இருந்தனர். அவரிடம் சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள் தொடர்பாக துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் 100க்கும் மேற்பட்ட கேள்விகளைத் தயாரித்திருந்தனர். 

இன்றைய ஒரே நாளில் இத்தனை கேள்விகளுக்கும் பதில்கள் கிடைக்காவிட்டால் அடுத்தடுத்த நாட்கள் தொடர்ந்து தயாநிதியிடம் விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.மேலும் தயாநிதி மாறனின் உதவியாளர்கள் விசாரணையின் போது தெரிவித்த தகவல்களை முன்வைத்தும் தயாநிதி மாறனிடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. குறிப்பாக சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் எப்படி தயாநிதி மாறன் வீட்டில் அமைக்கப்பட்டது என்பதை இந்த விசாரணையில் அறிய இருப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து