முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெஜ்ரிவால் வீட்டு 2 மாத மின்கட்டணம் ரூ.1 லட்சத்துக்கு மேல்: பாஜக குற்றச்சாட்டு

புதன்கிழமை, 1 ஜூலை 2015      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டின் ஏப்ரல் மற்றும் மே மாத மின்சாரக் கட்டணம் சுமார் ரூ.91 ஆயிரம் என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. அர்விந்த் கெஜ்ரிவாலின் அரசு பங்களா, டெல்லி சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ளது. இந்த வீட்டின் மின்கட்டண ரசீதின் நகல்களை மாநில அரசின் பொது நிர்வாகத்துறை அளித்துள்ளது. இதில் மேற்கண்ட விவரம் தெரியவந்துள்ளது.  வழக்கறிஞரும் தகவல் உரிமைச் சட்ட ஆர்வலருமான விவேக் கார்க் எழுப்பிய கேள்விக்கு இத்தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கெஜ்ரிவால் வீட்டு மின் கட்டணம் ரூ.1 லட்சத்துக்கும் அதிகம் என்று டெல்லி பாஜக கூறியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து அமைச்சர்களின் மின்சாரப் பயன்பாட்டு கட்டணத்தை வெளியிட வேண்டும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.  இதுகுறித்து டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீண் கபூர் கூறும்போது, “முதல்வர் வீட்டின் மின்சார அளவீட்டுக்காக 2 மீட்டர்கள் உள்ளன. இதில் 1 மீட்டரில் ரூ.55 ஆயிரமும், மற்றொரு மீட்டரில் 48 ஆயிரமும் பதிவாகியுள்ளது” என்றார். 

இதனிடையே பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா கூறும்போது, “கெஜ்ரிவால் வீட்டு 2 மாத மின் கட்டணம் சுமார் ரூ.1 லட்சம் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் கெஜ்ரிவால் தன்னை சாதாரண மனிதன் என்றும் எளிய வாழ்க்கை வாழ விரும்புவதாகவும் கூறியவர் தற்பொழுது ஒரு வி.ஐ.பி.யை போல நடந்து கொள்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து