முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நபிகள் நாயகத்தின் போதனைகளை பின்பற்ற இஸ்லாமியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

புதன்கிழமை, 1 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: நபிகள் நாயகம் வழியினைப் பின்பற்றும் இஸ்லாமியப் பெருமக்கள், அவரது போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடித்து, அவற்றை போற்றி வளர்க்க வேண்டும் என்று ,முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். அதிமுக சார்பில் சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்,  இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உரையை அதிமுக பொருளாளர் . ஓ. பன்னீர்செல்வம் வாசித்தார் அந்த உரையில் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:.

எனது அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில் வழக்கம் போல் நேரில் கலந்து கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும். எனினும், திடீரென்று ஏற்பட்ட உடல்நலக் குறைவின் காரணமாக இந்த விழாவிற்கு என்னால் நேரில் வர இயலவில்லை. என்னால் இந்த விழாவில் கலந்து கொள்ள இயலாவிடினும், எனது எண்ணங்கள் இந்த விழாவைச் சுற்றியே உள்ளன. எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் கழகப் பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் , எனது உரையை இந்த விழாவில் படிக்குமாறு நான் பணித்துள்ளேன்.

எனது அன்பான அழைப்பினை ஏற்று, ‘இஃப்தார் நோன்பு திறப்பு’ நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள உங்கள் அனைவருக்கும் என் சார்பிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் எனது நன்றியினையும், அன்பு கலந்த வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.ரமலான் திருநாள் ஓர் ஈகைத் திருநாள். தினமும் ஐந்து முறை இறை வழிபாடு மேற்கொள்ளும் இஸ்லாமியப் பெருமக்கள், ரமலான் மாதத்தில் நோன்புடன் கூடிய இறை வழிபாட்டை மேற்கொள்கின்றனர். மனித வாழ்க்கையில் அகமும், புறமும் தூய்மையடைவதற்கான ஒரு பயிற்சி தான் நோன்பு. நோன்பிருத்தல் மூலம் இறைப் பற்று அதிகமாகிறது. ஈகைக் குணம் மேலோங்குகிறது. "ஈகைத் தன்மையும், குன்றாத புகழும் தவிர வாழ்க்கைக்கு ஆக்கமும், ஊக்கமும் தரக்கூடியது ஏதுமில்லை"" என ஈகையின் மகத்துவத்தை எடுத்துரைத்து இருக்கிறார் வள்ளுவப் பெருந்தகை.  இறைவனால் அனுப்பப்பட்ட இறைத் தூதர் நபிகள் பெருமகனார், துன்பத்தை தனதாக்கிக் கொண்டு, இன்பத்தை மட்டுமே பிறருக்கு பகிர்ந்து கொடுத்து பரவசப்பட்டவர்கள். இதற்குக் காரணம் அவரது அன்பும், ஈகையும், கருணையும் தான்.

ஒரு பள்ளிவாசல். அங்கே நபிகள் நாயகம் உட்கார்ந்திருந்தார். அப்போது, ஒரு முதியப் பெண்மணி ஒருவர் நபிகள் பெருமகனாரை காண வந்திருந்தார். """"அல்லாவின் திருத்தூதரே, இந்த ஏழைக் கிழவி கொண்டு வந்துள்ள திராட்சைக் குலையை ஏற்று அருள வேண்டும்"" என்று கூறி நபிகள் வசம் அதனைத் தந்தார். அதனைப் பெற்றுக் கொண்ட நபிகள் பெருமகனார், ஒரு பழத்தை எடுத்து சுவைத்தார்கள். பிறகு மூதாட்டியுடனும், தோழர்களுடனும் உரையாடிக் கொண்டே ஒவ்வொரு பழமாக எடுத்துச் சாப்பிட்டார்கள். மூதாட்டிக்கு ஒரே மகிழ்ச்சி. பின்னர், எல்லையற்ற ஆனந்தத்துடன் அந்த மூதாட்டி அங்கிருந்து புறப்பட்டார். மூதாட்டி சென்றவுடன், நபிகள் பெருமகனாரின் தோழர்கள் அவரைப் பார்த்து, ""எல்லாவற்றையும் எல்லோருடனும் பங்கிட்டு உண்ணும் பழக்கம் உடைய தாங்கள், வழக்கத்திற்கு மாறாக எல்லா பழங்களையும் தாங்களே சாப்பிட்டது அதிர்ச்சியாக இருக்கிறது"" என்று தெரிவித்தனர்.

நபிகள் பெருமகனார் சிரித்துக் கொண்டே, """"அம்மா ரொம்பப் பிரியமாக அந்தப் பழங்களை என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார்கள். முதலில் ஒரு பழத்தை சுவைத்துப் பார்த்தேன். மிகவும் புளிப்பாக இருந்தது. வழக்கம் போல் உங்களுக்கு வழங்கினால் நீங்கள் முகத்தை சுளித்துக் கொண்டு பழம் புளிக்கிறது என்று கூறிவிட்டால் அந்த மூதாட்டி வேதனை அடைவார். மூதாட்டியின் அன்பான மனதை நோகடிக்கக் கூடாது என்பதற்காகத் தான், பழங்கள் அனைத்தையும் நானே சாப்பிட்டேன்"" என்று கூறினார். அடுத்தவர் மனது புண்படக் கூடாது என்பதற்காக புளிப்பையும் இனிப்பாக ஏற்றுக் கொள்கிற பண்பாடு நபிகள் நாயகம் அவர்களிடத்தில் இருந்தது. யாருடைய மனதும் நோகக் கூடாது, யாரையும் குறைத்துப் பேசக் கூடாது என்பதிலே உறுதியாக இருந்தவர் நபிகள் பெருமகனார்

நபிகள் நாயகம் வழியினைப் பின்பற்றும் இஸ்லாமியப் பெருமக்கள், அவரது போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடித்து, அவற்றை போற்றி வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நாடும், வீடும், சுற்றமும், உற்றமும் நலமுடன் வாழவும்; அமைதியும், ஆனந்தமும் எங்கும் பரவவும், எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு அவர் அந்த உரையில் குறிப்பிட்டுள்ளார்.  பங்கேற்றோர

முன்னதாக விழாவில் பங்கேற்றவர்களை வக்ப் வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் வரவேற்று பேசினார். அமைச்சர் அப்துல் ரஹிம் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை வாழ்த்தி பேசினார்.முடிவில் அதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளரும், எம்.பியுமான அன்வர் ராஜா நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன்,சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு. தமிழரசன், , சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் . ஆர். சரத்குமார் , அகில இந்திய தேசிய லீக் தலைவர் . எஸ்.ஜே. இனாய்த்துல்லாஹ் , தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் . எஸ். ஷேக் தாவூத், மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பேராயர் டாக்டர் மா. பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை வக்ப் வாரியத்தலைவரும்.அனைத்துலக எம்ஜி.ஆர். மன்ற செயலாளருமான தமிழ்மகன் உசேன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சன்னி பிரிவு தலைமை ஹாஜிமுப்தி டாக்டர் ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் , ஷியா பிரிவு தலைமை ஹாஜி ஹாஜி குலாம் முகமது மெஹடிகான் , அண்ணா சாலை தர்கா அறங்காவலர் சையத் மொய்னுதீன், , ஆற்காடு இளவரசர் முகம்மது அலி , ஆற்காடு இளவரசி பேகம் சாஹிபா சயீதா அப்துல் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
வாசகர் கருத்து

1 கருத்துகள்

  1. Anonymous July 2, 15:07

    அட மானம் கெட்ட பெயரர் தாங்கிகளா ஆம்பூர் கொலையை கேட்க வக்கில்லா அம்மாவின் அடிமைகளா நோன்பு கஞ்சி குடிக்க போயடிக்ளா நம் உயிரை விட மார்க்கம் முகியமடா

    Reply to this comment
    View all comments

    வாசகர் கருத்து