முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிமுக கிளைச்செயலாளர் படுகொலை முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம்

புதன்கிழமை, 1 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: தேனி மாவட்டம் லட்சுமிபுரம் கிளை செயலாளர் மந்திரி படுகொலைக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் இந்த படுகொலையை செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:–

தேனி மாவட்டம், தேனி ஒன்றியம், ஜங்கால்பட்டி ஊராட்சி, லட்சுமிபுரம் கிளைக் கழகச் செயலாளரும், ஊராட்சி ஒன்றியக்குழு 12–வது வார்டு உறுப்பினருமான மந்திரி முன் விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.இந்தப் படுகொலையைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அன்புச் சகோதரர் மந்திரியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். கடலூர் கிழக்கு மாவட்டம், பண்ருட்டி ஒன்றிய மாணவர் அணி செயலாளர் எஸ்.சிவக்குமார், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் பொன்.அண்ணாதுரை, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியம் செவ்வூர் ஊராட்சி மன்றத் தலைவர் மல்லிகா ஆகியோர் மரணமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டும்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் பகுதி இளைஞர் பாசறை இளம் பெண் பாசறைத் தலைவர் கண்ணன், வடசென்னை வடக்கு மாவட்டம் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் பகுதி 39 தெற்கு வட்டத்தைச் சேர்ந்த கழக உடன் பிறப்பு வெங்கடேசன் ஆகியோர் சாலை விபத்தில் அகால மரணமடைந்து விட்டனர் என்று செய்தி கேட்டும் மிகுந்த வருமுற்றேன். சிவக்குமார், அண்ணா துரை, மல்லிகா, கண்ணன், வெங்கடேசன் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனு தாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரண மடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து