முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெர்மனியில் கார் நிறுவனத்தில் பணியாளரை கொன்ற ரோபோ

வியாழக்கிழமை, 2 ஜூலை 2015      உலகம்
Image Unavailable

பெர்லின்: ஜெர்மனின் ஃப்ராங்ஃப்ரூட்டில் உள்ளது ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவத்தின் தலைமை உற்பத்தி ஆலை. இதில் பணியாற்றி வந்த 22 வயதுமிக்க ஊழியரை அங்கு பணியில் இருந்த ரோபோ திடீரென இழுத்து பெரிய தகடு மீது தள்ளி நசுக்கியே கொன்றதாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஹில்விக் கூறினார்.

அவர் ரோபோவை உருவாக்கும் குழுவில் இருந்தார். அவரை ரோபோ ஒன்று பிடித்து மெட்டல் பிளேட்டுடன் வைத்து அவரை நசுக்கி கொலை செய்தது. இது குறித்து ஃபோக்ஸ்வேகன் செய்தித் தொடர்பாளர் ஹெய்கோ ஹில்விக் கூறுகையில்,ரோபோவில் எந்த பிரச்சனையும் இல்லை. இது மனித தவறால் நடந்த சம்பவம் என்று தெரிய வந்துள்ளது. அந்த ரோபோ ஃபேக்டரியில் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே வேலை செய்யும்.

சம்பவம் நடந்தபோது அந்த இடத்தில் இருந்த மற்றொரு ஒப்பந்த பணியாளரை ரோபோ ஒன்றும் செய்யவில்லை.இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.கொலை குறித்து வழக்குப்பதிவு செய்வதா அப்படி செய்தால் யார் மீது வழக்குப்பதிவது என்று போலீசார் யோசித்துக் கொண்டிருக்கின்றனர் என்று ஜெர்மனி ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து