முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக ஹாக்கி அரை இறுதிப்போட்டியில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் இன்றுமோதல்

வியாழக்கிழமை, 2 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

அன்ட்வெர்ப்,(பெல்ஜியம்) உலக  லீக் ஹாக்கி அரை இறுதிப்போட்டியில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த அரை இறுதி ஆட்டம் அன்ட்வெர்ப் நகரில் நடைபெறுகிறது.

உலக கோப்பை ஹாக்கி லீக் போட்டி தற்போது பெல்ஜியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதிய ஆட்டத்தை டிரா செய்தது.

இன்று அன்ட்வெர்ப் நகரில் நடக்கும் அரை இறுதியில் இந்திய அணியும் போட்டியை நடத்தும் பெல்ஜியம் அணிகளும் மோதுகின்றன. பெல்ஜியம் அணி உலக ஹாக்கி அரங்கில் 4வது இடத்தில் உள்ள அணியாகும். கடந்த 2ஆண்டுகளில் பெல்ஜிய அணி பல வெற்றிகளை பெற்று உலக ஹாக்கி அரங்கில் முன்னேறியுள்ளது. பெல்ஜியத்தின் வீரர்கள் கோல் போடுவதில் மிகுந்த திறமைசாலிகளாக இருக்கிறார்கள்.இன்று நடக்கும் அரை இறுதி ஆட்டத்தில் அவர்களின் கோல் முயற்சிகளை தடுக்க இந்திய அணியினர் தற்காப்பு  ஆட்டத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.இந்திய ஹாக்கி தர பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.கடந்த 2011ம்ஆண்டு சாம்பியன் சேலன்ஞ்ச் ஹாக்கி போட்டி ஜோகன்ஸ் பெர்க் நகரில்(தென் ஆப்பிரிக்கா) நடைபெற்றது. அந்த போட்டியில் இருந்து இதுவரை ஆடிவந்துள்ள ஆட்டங்களில் இந்தியா சிறப்பாகவே ஆடியுள்ளது.இருப்பினும் பெல்ஜியம்வீரர்கள் கோல் அடிப்பதில்  சர்வதேச அளவில் சாதனை படைத்தவர்களாக இருக்கிறார்கள். சாம்பியன் சேலன் ஜ் போட்டியில் பெல்ஜியம் அணி வெற்றி வாகை சூடியது.அதனை தொடர்ந்து கடந்த 2012ம்ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியிலும் 2014ம் ஆண்டு நடந்த உலக கோப்பை ஹாக்கி போட்டியிலும் பெல்ஜியம்அணி இந்தியாவை வீழ்த்தியுள்ளது.

பெல்ஜியம் அணியின் சவால்களை சாம்பியன் டிராபி போட்டி நடந்த மெல்போர்ன் (ஆஸ்திரேலியா) நகரிலும் புவனேஷ்வரில் நடந்த ஆட்டத்திலும் இந்தியா தனது திறமையை காட்டியது.தற்போது நடந்து வரும் உலக ஹாக்கி லீக் கால் இறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணி5-4கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் மலேசிய அணியை3-2 கோல் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்குதகுதி பெற்றது. உலக ஹாக்கி லீக் ஆட்டத்தில் கால்இறுதிக்கு முன்னேறிய அணிகள் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடக்கும் உலக லீக் இறுதி பந்தயத்திற்கு தகுதி பெற்றுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து