முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் மீது அருண் ஜேட்லி மறைமுக தாக்கு

வியாழக்கிழமை, 2 ஜூலை 2015      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, சிலரது கருத்துகள் தொலைக்காட்சி விவாதத்துக்கு மட்டுமே சரியானதாக இருக்குமே தவிர, அரசை நிர்வகிக்க பொருந்தாது என காங்கிரஸ் கட்சியினரை குறிப்பிடாமல் மறைமுகமாக தாக்கியுள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21-ம் தேதி தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில் ஐபிஎல் ஊழல் புகாரில் சிக்கிய லலித் மோடி, போர்ச்சுகல் செல்வதற்கு பயண ஆவணம் பெற, பிரிட்டனிடம் பேசி சுஷ்மா ஸ்வராஜ் உதவிய விவகாரத்தை எழுப்பி அவையில் பெரும் அமளி ஏற்படுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜேட்லி, சிலரது கருத்துகள் தொலைக்காட்சி விவாதத்துக்கு மட்டுமே சரியானதாக இருக்குமே தவிர அரசை நிர்வகிக்க பொருந்தாது என்றார். இருப்பினும் லலித்மோடி குறித்த கேள்விகளுக்கு நேரடியாக பதில் தெரிவிக்க மறுத்துவிட்டார். மேலும், ஜி.எஸ்.டி. மசோதா, நிலச் சட்டம் போன்றவற்றிக்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடாது என தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து