முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லலித் மோடி விவகாரம்: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி

வியாழக்கிழமை, 2 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

மும்பை: ஊழல் வழக்கில் சிக்கியுள்ள ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு பயண ஆவணம் கிடைக்க உதவிய விவகாரம் தொடர்பாக, மத்திய அரசு பதிலளிக்கக் கோரி பல கேள்விகளை முன்வைத்துள்ளது காங்கிரஸ் கட்சி.  இது தொடர்பாக காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரிட்டனுக்கான இந்தியத் தூதர் ஜேம்ஸ் பேவனை சுஷ்மா சந்தித்தபோது லலித் மோடிக்கு பயண ஆவணம் கிடைக்க பரிந்துரை செய்துள்ளார். இந்த சந்திப்புக்கான மினிட்ஸ் பதிவுகள் வெளியுறவு அமைச்சகத்திடம் உள்ளது. இருவரும் என்ன பேசினார்கள் என்பதை மத்திய அரசு வெளியிட வேண்டும்.  எந்த மத்திய அமைச்சரின் உறவினருக்காவது வேலை வாய்ப்பு வழங்க லலித் மோடி முன்வந்தாரா என்பதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சியில் வெளியுறவு அமைச்சர்களாக இருந்த மாதவ்சிங் சோலங்கி, நட்வர் சிங் ஆகியோர் மீது புகார் எழுந்தபோது, அவர்களை ராஜினாமா செய்யச் சொல்லி நேர்மைக்கு உதாரணமாக இருந்தது காங்கிரஸ் கட்சி. எனவே தார்மீக மற்றும் அரசியல் சட்ட நெறிகளுக்கு உட்பட்டு சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் பதவி விலக பிரதமர் உத்தரவிடவேண்டும்.

கல்வித் தகுதி தொடர்பான சர்ச்சையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியும் பதவி விலகவேண்டும்.  லலித் மோடியை பிரிட்டனில் இருந்து வெளியேற்றுமாறு அந்நாட்டு அரசிடம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசு வலியுறுத்தியது. இது தொடர்பாக முந்தைய அரசின் அனைத்து தகவல் தொடர்புகளையும் வெளியிட வேண்டும்.

லலித் மோடியிடம் சுஷ்மா எத்தனை முறை தொலைபேசியில் பேசியுள்ளார்? சுஷ்மா அல்லது அவரது குடும்பத்தினர் எத்தனை முறை லலித் மோடியை சந்தித்துள்ளனர்? இதற்கான பதில்களை சுஷ்மா முழுமையாக தரவேண்டும். இவ்வாறு காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து