முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் வன்முறைக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2015      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, கடந்த 2002ம் ஆண்டுகுஜராத்தில் நடந்த வன்முறைக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் .பாஜ கட்சி எப்போதும் தீவிரவாதத்துடன் சமரசம் செய்து கொள்வதிலேயே இருக்கிறது என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அஜய் குமார் நேற்று கூறியதாவது,

பாஜ கட்சி தேசியம் என்ற முகமூடியை அணிந்து கொண்டிருக்கிறது. அந்த கட்சி தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவதாக கூறுகிறது ஆனால் அந்த கட்சி தீவிரவாதிகளுடனும் தீவிரவாதத்துடனும் சமரசம் செய்து கொள்வதிலேயே இருக்கிறது.

இந்திய விமானம் காந்தகாருக்கு(ஆப்கானிஸ்தான்)கடத்தப்பட்டபோது 3தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று கடத்தல் கும்பல் கெடு விதித்தது..தீவிரவாதிகளின் விதித்த கெடுவை ஏற்று 1999ம்ஆண்டு ஆட்சியில் இருந்த பாஜக தலைமையிலான  அரசு தீவிரவாதிகளை விடுவித்தது. இந்த முடிவு தவறானது என்று தேசிய உளவு பிரிவின்(ரா)முன்னாள் தலைவர் துலாத் தெரிவித்துள்ளார். குஜராத் வன்முறை காரணமாகவே 2004ம்ஆண்டு பொதுத்தேர்தலில்பாஜக தோற்க நேர்ந்தது என்றும் முன்னாள் பிரதமர்  வாஜ்பாய் கருதினார் என்றும் துலாத்  தெரிவித்துள்ளார். 2002ம்ஆண்டு குஜராத்தில் நடந்த வன்முறைக்கு வாஜ்பாய் கடும் கண்டனமும் தெரிவித்தார்.

குஜராத்தின் முதல்வராக இருந்த மோடி ராஜ தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் வாஜ்பாய் அப்போது கூறி இருந்தார். ராவின் முன்னாள் தலைவர் தகவல்படி பாரத ரத்னா விருது பெற்ற வாஜ்பாயின் வார்த்தைகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் 2002ம்ஆண்டு குஜராத் வன்முறைக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்பாரா?- ராவின் முன்னாள் தலைவர் துலாத் அளித்துள்ள பேட்டியில் சில நெருடலான உண்மைகள் இருக்கின்றன. மத்தியில் வாஜ்பாய் அரசு இருந்தபோது ஹிஸ்புல்முஜாகிதீன் தீவிரவாத தலைவர் சையத் சலாவுதீனுடன் தீவிரமாக பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார்கள். சலாவுதீனின் மகன் மருத்துவ பட்டபடிப்பு படிக்கவும் அப்போதைய வாஜ்பாய் அரசு அனுமதி அளித்துள்ளது.பாஜக எப்போது ஆட்சியில் இருந்தாலும் போலி தேசிய முகமூடியை அணிந்து கொள்கிறது.நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கு சலாவுதீன் மற்றும் அவரது தீவிரவாத அமைப்புமே காரணம். காந்தகார் விமான கடத்தல் பேரத்தில் பயங்கர தீவிரவாதி மசூத் அசார் உள்பட 3தீவிரவாதிகளை வாஜ்பாய் தலைமையிலான அரசு விடுவித்தது. இது வேதனைக்குரியது என்று ரா அமைப்பின் முன்னாள் தலைவர் தெரிவித்து இருக்கிறார்.இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் இருந்து பிரச்சாரம் செய்தவர் மசூத் அசார் ஆவார்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து