முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் பொருளாதாரம் 2லட்சம் கோடி டாலரை எட்டியது உலக வங்கி தகவல்

வெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2015      வர்த்தகம்

புதுடெல்லி, இந்தியாவின் பொருளாதாரம் 2லட்சம் கோடி டாலரை(ஒருடாலர்ரூ63) எட்டியுள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி(ஜி.டி.பி) அளவு 2014ம் ஆண்டில் 2லட்சம் கோடி டாலர் அளவை எட்டியிருக்கிறது என உலக வங்கி வாஷிங்டனில் வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் 60ஆண்டுகளில் அதன் பொருளாதாரம் 1லட்சம் கோடி டாலரை எட்டியது.ஆனால் அடுத்த 7ஆண்டுகளில் மேலும்1லட்சம் கோடி டாலரை இந்தியா எட்டியிருக்கிறது.

உலக வங்கி புள்ளி விவரப்படி இந்தியாவின் தேசிய வருவாய் நபர் ஒன்றுக்கு வருடத்திற்கு ரூ1லட்சமாக இருக்கிறது.

கடந்த 2014ம்ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.4சதவீதமாக இருந்தது.சீனாவை போன்று இந்தியாவின் பொருளாதாரமும் வேகமாக வளர்ந்து வருகிறது.கடந்த 2008ம்ஆண்டில் இந்தியா பெரும் நிதி நெருக்கடியில் தவித்தது.அதன் பிறகு இந்தியாவின் பொருளாதாரம் 2மடங்காக உயர்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து