முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்க்கண்டில் ராஜ்யசபா இடைத்தேர்தல்: பா.ஜ.க. வெற்றி

வெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2015      உலகம்
Image Unavailable

ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற ராஜ்யசபா இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் எம்.ஜே. அக்பர் வெற்றி பெற்றுள்ளார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ராஜ்யசபா எம்பியான கே.டி.சிங், திரிணாமுல் கட்சியில் இணைந்தார். இதனால் அவர் தமது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜார்க்கண்டில் ராஜ்யசபா இடைதேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் எம்.ஜே. அக்பரும், அவரை எதிர்த்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் ஹாஜி ஹூசைன் அன்சாரியும் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 80 எம்.எல்.ஏ.க்களில் 78 பேர் வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர். இதில் ஒரு வாக்கு செல்லாதது என்று அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பதிவான வாக்குகள் 77. இதில் எம்.ஜே. அக்பருக்கு ஆதரவாக 48 வாக்குகளும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் ஹாஜி ஹூசைன் அன்சாரிக்கு ஆதரவாக 29 வாக்குகளும் பதிவாகியிருந்தன.இதையடுத்து எம்.ஜே. அக்பர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். தற்போது எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.ஜே. அக்பரின் பதவிக் காலம் இன்னும் ஓராண்டு காலம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து