முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி மலைப்பாதையில் திருடர்கள் தொல்லை அதிகளவில் உள்ளது: அமெரிக்க பெண் பக்தர் புகார்

சனிக்கிழமை, 4 ஜூலை 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை - திருமலை திருப்பதி தேவஸ்தான அன்னமயபவனில் தொலைபேசி மூலம் பக்தர்களிடம் குறைகேட்கும் நிகழ்ச்சி நடந்தது. கூட்டத்திற்கு தேவஸ்தான முதன்மை அதிகாரி சாம்பசிவ ராவ் தலைமை தாங்கி பக்தர்களிடம் குறைகளை கேட்டு பதில் அளித்தார். அப்போது ஆந்திர மாநிலம் காகிநாடாவை சேர்ந்த பக்தர் ராம்மோகன் கூறுகையில், முன்பெல்லாம் திருமலை கல்யாண கட்டாவில் முடிகாணிக்கை செலுத்தப்படும்போது பணியாளர்கள் பணம் கேட்பர். ஆனால் தேவஸ்தான நடவடிக்கை காரணமாக முடிகாணிக்கை செலுத்துபவர்களஇடம் பணம் பெறாமலேயே காணிக்கை முடி எடுக்கின்றனர். அதேபோல் எந்த ஒரு பிரதிபலனின்றி அன்னதான சிப்பந்திகள் சேவை செய்கின்றனர்.

இவை வரவேற்பதாக உள்ளது என்றார். ஆந்திர மாநிலம் சீகாகுளம் நரசிம்மபேட்டை பகுதியை சேர்நஅத சீனிவாஸ் என்ற பக்தர்கள் கூறுகையில், திருப்பதியில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதியான விஷ்ணுநிவாசத்தில் ஆன்லைன் மூலம் தங்கும் விடுதி குறித்து கேட்டால் ஊழியர்கள் சரியான பதில் தெரிவிக்க மறுக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். பதில் அளித்த முதன்மை அதிகாரி, விஷ்ணு நிவாசம் தங்கும் விடுதிகள் ஆன்லைன் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். அனைத்து விடுதிகளும் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம், என்றார். அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து ஜெயலட்சுமி என்ற பெண் பக்தர் பேசுகையில் திருமலைக்கு செல்லும் நடைபாதையில் திருடர்கள் தொல்லை உள்ளது. அங்கு திருட்டி நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பதில் அளித்த முதன்மை அதிகாரி, அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு வழியாக திருமலைக்கு வரும் நடைபாதையில் பாதுகாப்பு சிப்பந்திகள் அதிகளவில் நியமிக்கப்பட்டு பக்தர்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. எனவே எந்த பயமும் இல்லாமல் பக்தர்கள் நடந்து வரலாம், என்றார். அதன்பின்னர் தேவஸ்தான முதன்மை அதிகாரி சாம்பசிவராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திருமலையில் ரூ.300 ஆன்லைன் டிக்கெட்டுகள் வழங்கும் நேரம் கடந்த 1ம் தேதி முதல் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்பு 21 ஆயிரம் பேருக்கு இந்த கட்டண டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இப்போது கூடுதலாக 5 ஆயிரம் பக்தர்களுக்கு அதாவது 26 பக்தர்களுக்கு டிக்கெட் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட் வாங்கிய பக்தர்கள் 2 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். அதே போல் ரூ.50 கட்டண டிக்கெட்டுகளும் இதே நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை திருமலையில் செய்யப்பட்டாலும் நாடு முழுவதும் ஆன்லைன் முலம் காலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை பதிவு செய்து கொள்ள ஏர்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து