முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிகிச்சைக்கு பின் ஹேமா மாலினி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்

சனிக்கிழமை, 4 ஜூலை 2015      சினிமா
Image Unavailable

ஜெய்பூர் - தாவுஷா மாவட்டத்தில் நடந்த விபத்தில் படுகாயமடைந்த நடிகையும், பா.. எம்.பி.யுமான ஹேமா மாலினி சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று காலை மருத்துமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனாதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

 போர்ட்டிஸ் மருத்துவமனையின் செய்திதொடர்பாளர் தெரிவிக்கையில், ஹேமாமாலினியின் குடும்ப உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர், நேற்று காலை 9.30 மணியளவில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தெரிவித்தார். 66 வயதான ஹேமாமாலினி விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக நேற்று முன்தினம் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.

மேலும் மூக்கில் ஏற்ப்பட்ட எலும்பு முறிவிற்கும் சிகிச்சையளிக்கப்பட்டது.முன்னதாக, வியாழக்கிழமை இரவு ஹேமா மாலினி வந்த மெர்சிடீஸ் கார் எதிரே வந்த அல்ட்டோ காருடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இந்த விபத்தில் ஹேமாமாலினி உள்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர். பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக ஹேமா மாலினியின் கார் ஓட்டுனர் மகேஷ் சந் தாகூர் தாவுசா மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டார். காரை அதி வேகமாக ஓட்டியதாக .பி.சி - 279 மற்றும் உயிரிழப்பு ஏற்படக் கூடி வகையில் நடந்தாக 304() பிரிவின் கீழும் இவருக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கூடுதல் முதன்மை நீதிபதி பல்லவி சர்மா முன் ஆஜர்படுத்தப்பட்ட கார் ஓட்டுனர் தாகூருக்கு ஜாமீன் வழங்கி உத்தவிட்டார். பின் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து