முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றத்தை உருவாக்குவதே லட்சியம் ஐஏஎஸ் தேர்வில் சாதனை படைத்த தமிழக மாணவி

சனிக்கிழமை, 4 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது லட்சியம் என்று ஐஏஎஸ் தேர்வில் அகில இந்திய சாதனை படைத்த தமிழக மாணவி சாருஸ்ரீ கூறி்னார்.  ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிக்களுக்கான 2014 ஆம் ஆண்டிற்கான தேர்வு இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இத்தேர்வு முடிவுகளில் முதல் 4 இடங்களை பெண்களே பிடித்துள்ளனர். ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கான தேர்வை ஒவ்வொரு ஆண்டும் மத்தியப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தி வருகிறது. இது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக நடத்தப்படும்.

முதற்கட்ட தேர்வு கடந்த 2014 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ந்தேதி தொடங்கியது. இத்தேர்வை எழுத 9 லட்சத்து 45 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 4.51 லட்சம் பேர் தேர்வை எழுதியிருந்தனர். இதில் 16 ஆயிரத்து 933 பேர் மெயின் தேர்வுக்கு தகுதி பெற்றிருந்தனர். இதைத்தொடர்ந்து 3 ஆயிரத்து 308 பேர் கடந்த மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை நடைபெற்ற திறனாய்வு தேர்வுக்கு தகுதி பெற்றிருந்தனர் . இறுதிக்கட்டமாக ஆயிரத்து 236 பேர் காலியிடங்களுக்கு தேர்வு பெற்றிருக்கின்றனர்.

இத்தேர்வு முடிவுகளில் முதல் நான்கு இடங்களைப் பெண்களே பிடித்துள்ளனர். முதல் இடத்தில் இரா சிங்கால், 2ம் ஆம் இடம் ரேணு ராஜ், 3ம் இடத்தினை நிதி குப்தா, 4 ஆம் இடத்தினை வந்தனா ராய் ஆகிய பெண்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர். முதல் 5 இடங்களைப் பிடித்தவர்களில் சுகர்ஷா பகத் என்பவர் மட்டுமே ஆண் என்பது குறிப்பிடத்தக்கது. கோவையை சேர்ந்த சாருஸ்ரீ, : யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளில் தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் இசிஇ படித்துள்ளேன். இருந்தாலும் சிறு வயதில் இருந்தே எனக்குள் ஐஏஎஸ் ஆர்வமும் ஆசையும் தொடர்ந்து இருந்து வந்தது. அதனால் ஐஏஎஸ் ஆக ஆர்வம் காட்டினேன். பொதுவாக கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்பது தான் என்னுடைய லட்சியம். ஐஏஎஸ் அதிகாரிகள் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தான் அதிக அக்கறை காட்டுவார்கள். நாட்டுக்கான கொள்கை உருவாக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. அதற்காக தான் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற வெறித்தனத்தோடு படித்தேன் என்று அவர் கூறியுள்ளார். மொத்தம் தமிழகத்தில் இருந்து 118 மாணவர்கள் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 86 பேர் தங்களது கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெற்றுள்ளனர் என்று சென்னை அண்ணா நகர் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குனர் சங்கர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து