முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அல்ஜீரிய சுதந்திர தினம்: ஜனாதிபதி பிராணாப் வாழ்த்து

சனிக்கிழமை, 4 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - அல்ஜீரிய  குடியரசின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பிராணாப் முகர்ஜி அந்த நாட்டு அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அல்ஜீரிய அதிபருக்கு அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில், இந்திய அரசின் சார்பாகவும், இந்திய மக்கள் சார்பாகவும் எனது சார்பாகவும் இந்த நல்ல நேரத்தில் அல்ஜீரிய குடியரசு மக்களுக்கும், தங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அல்ஜீரியாவுடன் இந்தியா நட்புறவு கொண்டிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இதேபோல் வெனிசுலா நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டும் ஜனாதிபதி பிராணாப் முகர்ஜி அந்நாட்டு மக்களுக்கும், அரசுக்கும் தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து உள்ளார். வெனிசுலா அதிபர் நிக்கோலசுக்கு அவர் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து