முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இணைய தொழில் முனைவோர்களுடன் ராகுல் சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: நாட்டில் இணைய தொழில் முனைவு மற்றும் வணிகம் ஆகிய வற்றை மேற்கொள்வதில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள், குறித்து இணைய தொழில் முனைவோர்களை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள தாவது: இணைய தொழில் முனைவு மற்றும் வணிகம் ஆகியவற்றை மேற்கொள்வதில் உள்ள எதிர்கால சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து, இணைய தொழில்முனைவோர்களை சந்தித்தேன், இந்த சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

சுகாதாரமோ அல்லது நிதிச் சேவையோ எதுவாக இருந்தாலும், எளிமையான‌ கண்டுபிடிப்புகள் சாதாரணமான மனிதர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங் களை ஏற்படுத்துகின்றன. மேலும் வெளிப்படைத்தன்மையும் அதி கரிக்கிறது. இன்றைய தலை முறையினரின் கண்டுபிடிப்புகள் உண்மையிலேயே ஆச்சரியப் படத்தக்க வகையிலும் பாராட்டத் தக்க வகையிலும் இருக்கின்றன.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து