முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் ஒரே நாளில் 4 ஆயிரம் முறை நில அதிர்வு 66 ஆயிரம் பேர் வெளியேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூலை 2015      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்: சீனாவில் 7 பேர் உயிரைக் குடித்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஒரே நாளில் சுமார் 4 ஆயிரம் முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக சீனாவின் பூகம்ப ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. சீனாவின் வடமேற்கு பகுதியான ஜிங்ஜியாங் உய்கூர் பகுதியில் கடந்தவெள்ளிக்கிழமை 6.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 7 பேர் உயிரிழந்தனர். 71 பேர் படுகாயமடைந்தனர்.பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோ மீ்ட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 12 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன.

இந்த நிலநடுக்கத்தை அடுத்து 66 ஆயிரம் பேர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.இந்நிலையில், இந்த நிலநடுக்கத்திற்குப் பின்னர் சுமார் 4 ஆயிரம் முறை நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக சீன பூகம்ப ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இவைகளில் பெரும்பாலானவை 4 ரிக்டருக்கு அதிகமானவை.தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் இன்னும் நிலநடுக்க பீதியிலேயே உள்ளனர். எனினும், பேரழிவு மேலாண்மை நடவடிக்கைக்கு தயார் நிலையில் உள்ளதாக ஜிங்ஜியாங் மாகாண அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து