முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிக அதிகஎடை கொண்ட பி.எஸ்.எல்.வி.-சி28ராக் கெட் விண்ணில் வரும் 10ம் தேதி ஏவ திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

பெங்களூரு:  இதுவரை இல்லாத அளவில் மிக அதிக எடை கொண்ட  பி.எஸ்.எல்.வி.-சி28.  ராக்கெட் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து வரும் 10-ந்தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது.உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ராக்கெட் 5 வெளிநாட்டு செயற்கைகோள்களை சுமந்து சென்று பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்துகிறது

இஸ்ரோவின் வர்த்தக அமைப்பான "ஆன்ட்ரிக்ஸ்" இதுவரை இல்லாத வகையில் அதிக எடை கொண்ட வர்த்தக ரீதியில் ஏவப்படும் ராக் கெட்இதுவாகும். இதன் மூலம் செலுத்தப்படும் 5 வெளிநாட்டு செயற்கைகோள்களும் மொத்தம் 1,440 கிலோ எடை கொண்டதாகும். 13-வது விண்கலமாக ஏவப்படும்  பி.எஸ்.எல்.வி.-சி28.

ராக்கெட் ஒரே மாதிரியான 3டிஎம்சி3 ஆப்டிக்கல் எர்த் அப்சர்வேஷன் செயற்கைக்கோள்களைசுமந்து செல்கிறது. இந்த செயற்கைக்கோள்கள் இங்கிலாந்தின் எஸ்.எஸ்.டி.எல் நிறுவனம் தயாரித்தது ஆகும். 447 கிலோ கொண்ட இந்த 3 செயற்கைக்கோள்களும் சுமார் 647 கிலோ மீட்டர் தொலைவுள்ளசுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து