முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரிய கிறிஸ்தவ ஆலயத்தில் பெண் மனித வெடிகுண்டு வெடித்து 5 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூலை 2015      உலகம்
Image Unavailable

போடிஸ்கும்(நைஜீரியா): நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பெண் மனித வெடி குண்டு நேற்று வெடித்தது.இந்த குண்டு வெடிப்பில் 5பேர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்புக்கு போகோ ஹரம் தீவிர வாத அமைப்பே காரணம் என்று  குற்றம் சாட்டப்படுகிறது. கடந்த வாரத்தில் இந்த அமைப்பு 200பேரை கொன்று குவித்தது. கடந்த புதன் கிழமையன்று ஒரு மசூதியில்  மக்கள் தொழுகை நடத்திய போது போகோ ஹரம் தீவிரவாத அமைப்பு தாக்கியதில் 100பேர் பலியானார்கள்.

நேற்று நடந்த குண்டு வெடிப்பு போடிஸ்கும் நகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்தது.அந்த இடத்திற்கு போலீசார் விரைந்தனர். நைஜீரிய நாட்டின் யோபே மாநிலத்தில் உள்ள வடகிழக்கு நகரமான போடிஸ்கும் மிகப்பெரும் நகரமாகும்.சமீப நாட்களாக நடந்து வரும் குண்டு வெடிப்புக்கு நைஜீரிய ஜனாதிபதி முகமது புகாரி கடந்த வெள்ளிக்கிழமையன்று கடும் கண்டனம் தெரிவித்தார்.

வடகிழக்கு நைஜீரியா பகுதியில் உள்ள பெரும்பாலான இடங்களில் போகோ ஹரம் தீவிரவாத அமைப்பு பலம் வாய்ந்ததாக இருக்கிறது.இந்த அமைப்பு எல்லையை கடந்தும் தாக்குதல் நடத்தி வருகிறது.நைஜீரியாவில் கடந்த 6ஆண்டுகளில் 13ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.15லட்சம் மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து