முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோபா அமெரிக்கா கால்பந்து: அர்ஜென்டீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது சிலி

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

சாண்டியாகோ: கோபா அமெரிக்கா சாம்பியன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினாவை பெனால்டி ஷூட் அவுட்டில் 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது சிலி. 99 வருட கால கோபா அமெரிக்கா வரலாற்றில் இதுவரை சிலி சாம்பியன் பட்டத்தை வென்றதே கிடையாது. இந்த நிலையில் முதல் முறையாக அது சாம்பியன் ஆகியுள்ளது.   சிலியின் வெற்றி கோலை அலெக்சிஸ் சான்செஸ் போட்டு ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தார்.

முன்னதாக முழு நேர ஆட்டம் கோல்களே இல்லாமல் முடிந்தது. இதையடுத்து கூடுதல் நேரம் தரப்பட்டது. அதிலும் கோல் விழவில்லை. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் தரப்பட்டது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட சிலி வீரர்கள் அசத்தி விட்டனர். 4 கோல்களை அவர்கள் கொளுத்த, அர்ஜென்டினா பதட்டத்தில் தவறி ஒரு கோல் மட்டுமே அடித்து தோல்வியைத் தழுவியது.

ஜாம்பவான் அணியான அர்ஜென்டினா கடந்த 22 வருடமாக எந்த முக்கிய சர்வதேச பட்டத்தையும் பெறாமல் தட்டுத் தடுமாறிக் கொண்டுள்ளது. இப்போது நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மெஸ்ஸி தலைமையிலான அணியினருக்குக் கிடைத்தது ஏமாற்றம்தான்.  அதேசமயம், இந்த வெற்றி சிலிக்கு மேலும் ஒரு சிறப்பையும் தேடிக் கொடுத்தது. கோபா அமெரிக்காவில் அது இதுவரை அர்ஜென்டினாவை தோற்கடித்தது இல்லை. அதை சரி செய்து விட்டது. அர்ஜென்டினாவை முதல் முறையாக கோபாவில் சிலி வீழ்த்தியது அந்த நாட்டு ரசிகர்களுக்கு பேருவகையை கொடுத்துள்ளது.

என்னதான் ஜாம்பவான் என்றாலும் கூட மெஸ்ஸிக்கும், அர்ஜென்டினா அணிக்கும் ராசியே கிடையாது. அதாவது அர்ஜென்டினாவுக்கு அவர் பெரிய வெற்றியை இதுவரைத் தேடித் தந்ததில்லை. அதிக அளவில் கோல் அடித்ததும் கிடையாது. கிளப்களில் ஆடும் அளவுக்கு அவர் அர்ஜென்டினாவுக்காக அதிக அளவில் அசத்தியது இல்லை. மொத்தத்தில் உலகக் கோப்பையில் ஜெர்மனியிடம் வாங்கிய அதிர்ச்சி அடிக்கு அடுத்து இப்போது சிலியிடிம் சிக்கி வெளியேறியுள்ளது அர்ஜென்டினா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து