முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் கருணாநிதிக்கு புகாருக்கு தமிழக அரசு பதிலடி

திங்கட்கிழமை, 6 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் விடுதலைப்புலிகள் மீது தமிழக அரசு எந்த குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை என்று கருணாநிதிக்கு நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். இது குறித்து  நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் .ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் மூன்று இடைக்கால மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அவை நிலுவையில் உள்ளன. இடைக்கால மனு எண்.25/2014 -ன்படி, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பிற்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை அனுப்பப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இடைக்கால மனு எண்.26/2015-ல், தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் முல்லைப் பெரியாறு அணைக்கு சுதந்திரமாக செல்வதை கேரள அரசோ அல்லது அதன் பிரதிநிதிகளோ தடுக்கவோ அல்லது தடை செய்யவோ கூடாது என்ற உத்தரவையும்; முல்லைக்கொடி மழை அளவு நிலையத்தில் வாராந்திர அடிப்படையில் மழை அளவு அட்டவணையை மாற்றுவதற்கும்; 23.7.2012 அன்றைய உச்சநீதிமன்ற ஆணையின்படி வல்லக் கடவிலிருந்து முல்லைப் பெரியாறு அணைக்குச் செல்லும் வனச் சாலையை சீர் செய்வதற்கான ஒப்புதலை கேரள அரசு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இடைக்கால மனு எண்.27/2015-ன்படி, புதிய முல்லைப் பெரியாறு அணைக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு எதையும் தயார் செய்வதற்கு கேரள அரசுக்கு தடை விதிக்க கோரப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் இந்த மூன்று மனுக்களும் தாக்கல் செடீநுயப்பட்டபின், 11.5.2015 அன்று கேரள அரசு, மத்திய அரசிடம் புதிய முல்லைப் பெரியாறு அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்கல் மதிப்பீட்டு ஆய்வுக்கான ஆய்வு வரம்புக்கு ஒப்புதல் வழங்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகத்தைக் கேட்டுக் கொண்டது. கேரள அரசு கோரியபடி சுற்றுச்சூழல் தாக்கல் மதிப்பீட்டு ஆடீநுவுக்கான ஆய்வு வரம்புக்கு ஒப்புதல் வழங்கக்கூடாது என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகச் செயலாளருக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.முதலமைச்சர் ஜெயலலிதா பாரதப் பிரதமருக்கு இது தொடர்பாக 10.6.2015 அன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்கள்.

அதில், உச்சநீதிமன்றம் கடந்த 7.5.2014 அன்று பிறப்பித்த உத்தரவில் தற்போது உள்ள முல்லைப் பெரியாறு அணை கட்டுமான அடிப்படையிலும், நீரியியல் அடிப்படையிலும், நிலவியல் அடிப்படையிலும் பாதுகாப்பாக இருக்கிறது என்றும் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டப்பட வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை நிராகரித்துள்ள நிலையில் அந்த உத்தரவிற்கு எதிராக கேரள அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனு 2.12.2014 அன்று உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும், அதனால் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை முடிந்து விட்ட ஒன்று என்பதை சுட்டிக்காட்டி, இந்த சூழ்நிலையில் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஆய்வு வரம்புகளை மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் பரிசீலித்துள்ளது உச்சநீதிமன்ற ஆணையை மீறும் செயலாகும் என்றும்; கேரள அரசின் இது போன்ற கோரிக்கையை வருங்காலத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளாமல் இருக்க உத்தரவிட வேண்டும் என்றும்; கேரள அரசின் இந்த கோரிக்கையை நிராகரித்து அதனை கேரள அரசுக்கே திருப்பி அனுப்பிட வேண்டும் என்றும் அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்கள். 2

உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசால் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டபின் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து கூடுதல் ஆணை உறுதி ஆவணம் ஒன்றை தாக்கல் செய்திட முதலமைச்சர் ஜெயலலிதா அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில், இந்த நிகழ்வுகளையெல்லாம் தெரிவித்து தமிழ்நாடு அரசின் சார்பில் 1.7.2015 அன்று ஒரு கூடுதல் ஆணை உறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, அதனை திரித்து தமிழக அரசின் மீது குற்றம் கூறும் வகையில் திமுக தலைவர் கருணாநிதி ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். கருணாநிதியின் கருத்துகளை ஒட்டியே வேறு சில அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழக அரசுக்கு எதிராக அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் வகையிலும், தமிழக விவசாயிகளின் நலனைப் பேணிப் பாதுகாக்கும் வகையிலும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பெற்றவர் முதலமைச்சர் ஜெயலலிதா தான். அவரது ஆட்சிக் காலத்தில், முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி உச்சநீதிமன்றத்தின் முன் எடுத்து வைக்கப்பட்ட திறமையான வாதங்களின் அடிப்படையில் தான் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தாற்காலிகமாகக் குறைக்கப்பட்ட நீர்த்தேக்கும் அளவான 136 அடியிலிருந்து முதற் கட்டமாக 142 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம் என்றும்; மத்திய நீர்வளக் குழுமத்திற்குத் திருப்தி அளிக்கக் கூடிய வகையில் எஞ்சியுள்ள பலப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு செய்து முடித்த பின்னர், அணையின் முழு மட்ட நீரளவான 152 அடி வரை உயர்த்துவதற்கு தனிப்பட்ட வல்லுநர்கள் அணையின் பாதுகாப்பை ஆடீநுவு செய்ய வேண்டும் என்றும் 27.2.2006 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை செயல்படுத்த இயலாத வகையில், கேரள அரசு, முல்லைப் பெரியாறு அணையின் முழு நீர்மட்ட அளவு 136 அடி என நிர்ணயித்து ஒரு சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது.

முதல்வர் ஜெயலலிதா ஆணையின் படி, அந்த திருத்திய சட்டத்தினை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா அரசால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையின் பேரில் ஏற்படுத்தப்பட்ட அதிகாரம் படைத்த குழுவில் யாரையும் நியமிக்கப் போவது இல்லை என்று தமிழகத்திற்கு எதிரான நிலையைத் தான் முந்தைய மைனாரிட்டி திமுக அரசு எடுத்தது. முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தலின் காரணமாகவே, தமிழகத்தின் சார்பில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் ஏ.ஆர்.இலட்சுமணன் முந்தைய மைனாரிட்டி திமுக அரசு நியமித்தது. 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், அவர்களின் வழிகாட்டுதலின்படி, அதிகாரம் படைத்த குழுவின் முன்னால் வலுவான வாதங்கள் தமிழக அரசின் சார்பில் வைக்கப்பட்டதுடன், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் வலுவான எழுத்துப்பூர்வ வாதமும் சமர்ப்பிக்கப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் ஆகியவற்றின் காரணமாகவே 7.5.2014 அன்று உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இந்தத் தீர்ப்பில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தினை முதற் கட்டமாக 136 அடியிலிருந்து 142 அடி என்ற அளவிற்கு உயர்த்திக் கொள்ளலாம் என உத்தரவிடப்பட்டது. அதனால் தான் 21.11.2014 அன்று 37 ஆண்டுகளுக்குப் பிறகு முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்த்தேக்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டு இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட ஈவு இரக்கமற்ற தமிழ் இனப் படுகொலையை கண்டித்தும், அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்றும்; இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையிலும், அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையிலும், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதார தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்; இலங்கை நாட்டினை நட்பு நாடு என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு „தனி ஈழம்’ குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும், பொது வாக்கெடுப்பு நடத்திடவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்; சட்டமன்றத்தில் தீர்மானங்களை நிறைவேற்றி, இலங்கை வாழ் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, உலகில் உள்ள அனைத்து தமிழர்களும், ஜெயலலிதாவௌ பாராட்டுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் கருணாநிதி மக்களை குழப்பும் விதமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

கருணாநிதி தனது அறிக்கையில், """"முல்லைப் பெரியாறு பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பினை வழங்கிட ஒப்புக் கொள்வதாக மத்திய அரசு தெரிவித்திட முன் வர வேண்டும். இந்தப் பிரச்சனையில் தமிழக அரசும் மத்திய அரசிடம் முறையாக எடுத்துச் சொல்லி, தேவையான அழுத்தம் தந்து, மத்திய பாதுகாப்புக் கோருவதன் அவசியத்தை நேரிலே வலியுறுத்தி இருக்க வேண்டும்"" என்றெல்லாம் அறிவுரை வழங்கியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை வளாகத்தில் ஒரு சில கேரள அரசியல் கட்சிகளின் தூண்டுதலின் பேரில், ஒரு சிலர் வன்முறையில் ஈடுபட்டு, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வாயிற்கதவினை சேதப்படுத்தியதாக 3.12.2011 அன்று நாளேடுகளில் செய்திகள் வெளிவந்தன. இதனைத் தொடர்ந்து, 4.12.2011 அன்று ஒரு சிலர் வல்லக்கடவு பகுதி வழியாக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீரை வெளியேற்றவும் மற்றும் அணைக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும் கருவிகள், இயந்திரங்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்றதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.

இவ்வாறு செய்திகள் வந்ததை அடுத்து, முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு 4.12.2011 அன்று அனுப்பிய கடிதத்தில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பிற்காக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினை அனுப்பி வைக்கக் கேட்டுக் கொண்டார்.  முல்லைப் பெரியாறு அணை மற்றும் அதனைச் சார்ந்த கட்டுமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையை மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு 5.12.2011 அன்று உச்சநீதி மன்றத்தில் இடைக்கால மனு ஒன்றினை தாக்கல் செய்தது.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம்,14.12.2011 நாளிட்ட அலுவலகக் குறிப்பாணையில், மத்திய தொழில் பாதுகாப்புப் படை உள்ளிட்ட மத்தியப் படைகளை அணையின் பாதுகாப்பிற்காக நீதிமன்ற ஆணையின் அடிப்படையிலோ 4  அல்லது சம்பந்தப்பட்ட மாநில அரசிடமிருந்து பெறப்படும் கோரிக்கையின் அடிப்படையிலோ மட்டுமே அனுப்பி வைக்க முடியுமென்றும், மேலும், ‘காவல்’ மற்றும் ‚பொது ஒழங்கமைதி‛ ஆகிய பொருண்மை அரசமைப்புப்படி மாநிலத்தைச் சார்ந்தவையாகும் என்றும், மாநிலத்திற்கு உதவும் வகையில் சம்பந்தப்பட்ட மாநிலம் கேட்டுக்கொள்ளுமேயானால் இத்தகைய படைப் பிரிவினை அனுப்பி வைக்க இயலும் என்றும் உச்சநீதி மன்றத்திற்குத் தெரிவித்தது. கேரள அரசு, அணை பாதுகாப்பிற்காகப் போதுமான காவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும், அணையைப் பாதுகாப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் கேரள அரசு மேற்கொள்ளும் எனவும் உச்சநீதிமன்றத்திற்கு உறுதியளித்தது. இந்த உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டு உச்சநீதி மன்றம் இந்த இடைக்கால மனு முடிவுக்குக் கொண்டு வரப்படுகிறதென 15.12.2011 அன்று ஆணை பிறப்பித்தது.

உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்ற போது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் திமுக அங்கம் வகித்தது. மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கெல்லாம் பாதுகாப்பாக இருந்து அந்த ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து வந்த திமுக மத்திய அரசை இது குறித்து ஏன் வலியுறுத்தவில்லை? அல்லது மத்திய தொழில் பாதுகாப்புப் படையை அனுப்ப வேண்டாம் என திமுக தான் மத்திய காங்கிரஸ் அரசுக்கு அறிவுரை வழங்கியதா? என்பதை .கருணாநிதி தான் விளக்க வேண்டும். அப்போதைய பாரதப் பிரதமர் மன்மோகன் சிங, கருணாநிதியின் ஆலோசனையின் படியே தாம் செயல்படுவதாக வெளிப்படையாகவே தெரிவித்திருந்தாரே! அப்படியெனில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையை மத்திய அரசு அனுப்புவதற்கு தடையாக இருந்தது கருணாநிதியும், திமுகவும் தானா?

17.11.2014 அன்று கேரள சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோருடன் முன்னறிவிப்பு ஏதுமின்றி தமிழக அலுவலர்களை புறம் தள்ளிவிட்டு முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்குச் சென்றார். இது குறித்து கேரள காவலர்களுக்கு தமிழ்நாடு பொறியாளர்கள் தெரிவித்த போதிலும், அவர்களால் எந்த நடவடிக்கையையும் எடுக்க இயலவில்லை. இதனையடுத்து, தமிழ்நாடு அரசு 18.11.2014 நாளிட்ட கடிதத்தின் வாயிலாக அணையைப் பாதுகாக்கும் பொருட்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படையை அனுப்பி வைக்க மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து, 19.11.2014 அன்று தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் புதிதாக ஓர் இடைக்கால மனுவினை தாக்கல் செய்தது. இந்த மனுவில் அணை மற்றும் அதனைச் சார்ந்த கட்டுமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு மத்திய அரசு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினை அனுப்பி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிடும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த மனு உச்சநீதி மன்றத்தில் 3.7.2015 அன்று மீண்டும் விசாரணைக்கு வரவிருந்த நிலையில், இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து உச்சநீதிமன்றம் பதிவு செய்துகொள்ள வேண்டி, கூடுதல் ஆணை உறுதி ஆவணம் ஒன்றை 1.7.2015 அன்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது. இந்தக் கூடுதல் ஆணை உறுதி ஆவணத்தில் 12.5.2015 அன்று மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதத்துடன் மத்திய நுண்ணறிவுப் பிரிவின் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்தக் கூடுதல் ஆணை உறுதி ஆவணத்தில் தமிடிநநாடு அரசால் 19.11.2014 அன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு 17.4.2015 அன்று கேரள அரசால் தாக்கல் செய்யப்பட்ட எதிர் உறுதி ஆவணத்திற்குப் பின்னர் நிகழ்ந்த நிகழ்வுகளை உச்சநீதிமன்றம் பதிவு செய்து கொள்ளவேண்டும் என கோரப்பட்டுள்ளது. து. அதாவது, 12.5.2015 அன்று மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 முதல் 18 வரை முல்லைப் பெரியாறு அணை மற்றும் பெரியாறு நீர்மின் நிலையம் ஆகியவற்றில் மத்திய நுண்ணறிவுப் பிரிவு மேற்கொண்ட ஆடீநுவின் படி கேரள காவல் துறைக்கு பதிலாக மத்திய தொழில் பாதுகாப்பு படை அல்லது மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை மூலம் முல்லைப் பெரியாறு அணை பாதுகாக்கப்படவேண்டும் என்றும்; முல்லைப் பெரியாறு அணை மற்றும் இதர முக்கிய நிர்மாணங்களின் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை அல்லது மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை போன்ற தொழிலியல் பாதுகாப்பு படை ஈடுபடுத்தப்பட வேண்டும் என்ற மத்திய நுண்ணறிவுப் பிரிவின் அறிக்கையை உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார் என்றும் மத்திய அரசு உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்புப் படை அல்லது வேறு ஏதேனும் பாதுகாப்பு படையை முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பிற்கு அனுப்பி வைக்க தமிழக தலைமைச் செயலாளர் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் தெரிவித்து தலைமைச் செயலாளரின் கடித நகல் இணைக்கப்பட்டுள்ளது என்றும் தான் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்தது போல் விடுதலைப் புலிகள் மீது எந்தவித குற்றச்சாட்டையும் தமிழக அரசு சுமத்தவில்லை.  எனினும், ஊடகங்களில் இது போன்ற செய்திகள் வந்தவுடன், முதலமைச்சர் ஜெயலலிதா இது பற்றி என்னிடமும், அரசு உயரதிகாரிகளிடமும் விவாதித்தார்கள். அப்போது மத்திய நுண்ணறிவு பிரிவின் ஆய்வு அறிக்கையின் நகலை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது என்பது முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்துச் சொல்லப்பட்டது. அந்த அறிக்கையில் மத்திய நுண்ணறிவுப் பிரிவு முல்லைப் பெரியாறு அணை மற்றும் முக்கிய நிர்மாணங்கள் ஆகியவற்றுக்கு நக்சலைட்டுகள் போன்ற அமைப்புகளால் உள்ள அச்சுறுத்தல்கள் பற்றி தெரிவித்துள்ளதோடு பத்தி 4.4-ல் இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட பின் மீதமுள்ள உறுப்பினர்கள் ஒன்று திரள முயற்சித்துள்ளனர் என்றும் அவர்கள் இறுதிப் போரில் தமிழர்களுக்கு இந்தியா உதவி செய்யாததால், இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர் என்றும்  தெரிவித்துள்ளது. மேலும், முக்கிய நிர்மாணங்களுக்கு இவர்களிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பாக எதுவும் இல்லை என்றாலும், தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதிலும் கூட விடுதலைப் புலிகள் முல்லைப் பெரியாறு அணைக்கு சேதம் விளைவிப்பார்கள் என்று குறிப்பிட்டு மத்திய நுண்ணறிவுப் பிரிவு தெரிவிக்கவில்லை. இவ்வாறு நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து