முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவன் கோயில்களில் குரு பெயர்ச்சி விழா லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டு வழிபாடு

திங்கட்கிழமை, 6 ஜூலை 2015      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை: குருபகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு இடம் பெயர்ந்ததையொட்டி, தமிழகத்தில் உள்ள சிவன் கோயில்களில் குருபெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற்றது. முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, பொதுமக்களின் வசதிக்காக கோயில்களில் அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டன. .

நவக்கிரக கடவுள்களில் ஒருவரான குருபகவான், நேற்று முன்தினம் இரவு 11 மணி இரண்டு நிமிடத்தின்போது, கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பிரவேசித்தார். இதனையொட்டி, சிவன் கோயில்களிலும், நவக்கிரக ஸ்தலங்களிலும் குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற்றது. குரு பரிகார ஸ்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் ஆலங்குடி ஸ்ரீஆபத் சகாயேஸ்வரர் ஆலயம், தஞ்சை மாவட்டம், திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயம், திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகேயுள்ள திருப்பட்டூர் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் ஆலயம், நாகை மாவட்டம் மயிலாடுதுறை வதானேஸ்வரர் ஆலயம், கும்பகோணத்தை அடுத்த திருப்புறம்பயம் அருள்மிகு சாட்சிநாத சுவாமி கோயில், தூத்துக்குடி சிவன் கோயில் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து நவக்கிரக ஆலயங்களிலும் பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.

குருபகவானான தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் மேற்கொண்டனர். குருப்பெயர்ச்சி விழாவையொட்டி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து