முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெல்மெட் அணிய கூடுதல் கால அவகாசம் வேண்டும்- ஜி.கே.வாசன்

திங்கட்கிழமை, 6 ஜூலை 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இன்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

முல்லைப் பெரியாறு அணை பல லட்சம் மக்களின் வாழ்வாதார பிரச்சினை. இந்த அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை நிறுத்த வேண்டும்.அணையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மத்திய அரசுக்கு உள்ளன.

நகர மேம்பாட்டு திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. ஆனால் இந்தியாவில் 65 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். எனவே நகரங்களுக்கு இணையாக கிராமப்புற மேம்பாட்டுக்கும் மத்திய அரசு திட்டங்கள் வழங்க வேண்டும்.

ஹெல்மெட் அணிவது தொடர்பாக மக்களிடையே இன்னும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அவர்கள் விரும்பி ஹெல்மெட் வாங்கி அணியும் சூழ் நிலையை உருவாக்க வேண்டும்.

தற்போது கூடுதல் விலை மற்றும் தட்டுப்பாடு காரணமாக பலர் ஹெல்மெட் வாங்க இயலவில்லை என்று கூறப்படுகிறது. எனவே ஹெல்மெட் வாங்குவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும்.

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை மத்திய அரசு மீண்டும் கொண்டு வருவது கண்டனத்திற்குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.அதைத்தொடர்ந்து த.மா.கா. மாநில இளைஞர் அணி செயற்குழு கூட்டத்தில் ஜி.கே.வாசன் பங்கேற்றார். கூட்டத்திற்கு இளைஞர் அணி மாநில தலைவர் யுவராஜா தலைமை தாங்கினார். மாநில பொருளார் கோவை தங்கம், ஞானசேகரன், விடியல் சேகர், விஸ்வநாதன் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் மந்தைவெளி ராமஅருள், வலசை ஸ்ரீராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்ய வேண்டும். சிறுபான்மை மக்களின் சலுகைக்களுக்காக தொடர்ந்து போராடுவது, காவிரி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

ஜி.கே.வாசன் தலைமையில் நல்லாட்சி அமைய பாடுபடுவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து