முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் 1202 மாணவர்களுக்கு பட்டம்: கவர்னர் ரோசைய்யா வழங்கினார்

திங்கட்கிழமை, 6 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியின் 16–வது பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரோசைய்யா பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.4 தங்க மெடல்கள் முதல் ரேங்க் பெற்ற மாணவர்களுக்கும் 150 அண்ணா பல்கலைக்கழக ரேங்க் பெற்ற மாணவர்களுக்கும் பட்டம் வழங்கி பரிசு வழங்கினார்.விழாவில் கவர்னர் ரோசைய்யா பேசியதாவது:–

நான் உங்களை ‘எதிர்கால உலகத்தை உருவாக்குபவர்கள்’ என்றே அழைக்கிறேன். நம்மை சுற்றி உள்ள உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது. உங்கள் கல்வி மற்றும் முயற்சி இவ்வுலகத்தின் வேலை இல்லா திண்டாட்டத்தை அறவே குறைத்து விடும் என்று நம்புகிறேன். உங்கள் கல்வியானது நம் நாட்டை தலைமைப் பண்புமிக்க, சிறந்த பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.விழாவில் இளங்கலை பட்டம் பெறுவோர் 928 மாணவர்கள், முதுகலை பட்டம் பெறுவோர் 274 மாணவர்கள் மொத்தமாக 1202 மாணவர்கள் பட்டம் பெற்றனர். அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளில் பல்கலைக்கழக தேர்வில் ரேங்க பெற்ற 154 மாணவர்களுக்கு, கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

சாய்ராம் கல்வி குழுமத்தின் நிறுவனம் மற்றும் தலைவர் லயன் லியோமுத்து தலைமை ஏற்று நடத்தி வைத்தார்.

முதன்மை நிர்வாக அலுவலர் சாய்பிரகாஷ் யோ முத்து வாழ்த்துரை வழங்கினார். ‘டிரஸ்டி’ சர்மிளா ராஜா மற்றும் மேலாண்மைத்துறை தலைவர் மாறன் ஆகியோரும் பங்கேற்றனர்.கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் வரவேற்று பேசி கல்லூரி கல்வி அறிக்கையை வாசித்தார்.
முடிவில் டீன் ராஜேந்திர பிரசாத் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து