முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் இந்திய நிலைகள் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு

திங்கட்கிழமை, 6 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்: இந்திய எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் தனது வாலாட்டத்தைத் தொடங்கியுள்ளது. நேற்று அதிகாலை இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். காஷ்மீரில் உள்ள எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், ஊடுருவல்காரர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய ராணுவ வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து முறியடித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இது போல் எல்லை வழியாக ஊடுருவ முயன்ற சிலரை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தனது வாலாட்டத்தை தொடங்கியுள்ளது.

காஷ்மீரில் உள்ள நவ்காம் என்ற பகுதியில் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் என்று நேற்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து இந்திய நிலைகள் மீது சரமாரி யாக தாக்குதலை நடத்தினர். இது குறித்து எல்லை பாதுகாப்பு படை தரப்பில் கூறுகையில், பாகிஸ்தான் ராணுவத்தினர் அப்பகுதியில் உள்ள 6 இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிலும் சண்டை நேற்று காலை 5 மணி வரை நடந்தது என்றார்.

அதே போல் ஜம்மு பிராந்தியத்திலும் இந்திய பாகிஸ்தான் எல்லையில் அமைந்திருந்த எல்லை பாதுகாப்பு படைக்கு சொந்தமான இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் ஆர்னியா பிராந்தியத்தில்  சர்வதேச எல்லைக்கு அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் இரவு தொடங்கி இரண்டு முறை பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகள் மீது சுட்டனர். சுமார் 25 முதல் 30 ரவுண்ட்கள் எல்லை பாதுகாப்பு படை நிலைகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இரு தரப்பிலும் மாறி மாறி துப்பாக்கி சண்டை சில மணி நேரங்களுக்கு நீடித்தது. ஆனால் இப்பகுதியில் ஒரு இந்திய ராணுவ வீரர் மரணம் அடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஏற்கெனவே கடந்த ஜூன் 22ம் தேதி ஆர்.எஸ்.புரா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இது போல் அத்துமீறி தாக்குதல் நடத்த முயன்ற போது இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பதிலடி கொடுத்து முறியடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து