முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலவை தேர்தலில் பணம் கொடுக்க முயன்ற வழக்கில் மற்றொரு தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ கைது

திங்கட்கிழமை, 6 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: தெலுங்கானா மாநில மேலவை தேர்தலின் போது தங்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று நியமன எம்.எல்.ஏவுக்கு லஞ்சம் தரமுயன்ற விவகாரத்தில் அக்கட்சியின் மற்றொருஎம்.எல்.ஏ வீரய்யாவை தெலுங்கானா ஊழல் தடுப்பு பிரிவு நேற்று கைது செய்தது.

தெலுங்கானா மாநில மேலவைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்ததது.இந்த தேர்தலின் போது நியமன எல்.எல்ஏ ஸ்டீபன்சனுக்கு தெலுங்கு தேச எம்.எல்.ஏ ரேவந்த் ரெட்டி லஞ்சம்  தரமுயன்றார் என குற்றம் சாட்டப்பட்டதுள.இதுதொடர்பாக அந்த நியமன எம்.எல்.ஏ போலீசில் புகார் செய்தார்.இந்த புகாரைதொடர்ந்து ரேவந்த் ரெட்டியும் இதர 2நபர்களையும் தெலுங்கானா மாநில ஊழல் தடுப்பு பிரிவு கைது செய்து சிறையில் அடைத்தது.கடந்த மே மாதம்31ம் தேதியன்று அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.அதன் பின்னர் அவர்கள் ஜூன் 30ம் தேதியன்று உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுவிடுதலை ஆனார்கள்.

இந்த நிலையில் இந்த வழக்கில் மேலும் ஒரு தெலுங்கு தேச எம்.எல்.ஏ சந்திரா வெங்கடா வீரய்யா நேற்று கைது செய்யப்பட்டார்.  அந்த எம்.எல்ஏ தங்கள் முன் ஆஜராக வேண்டும் என்று ஊழல் தடுப்பு பிரிவு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அவரிடம் விசாரணை நடந்த பின்னர்  அந்த எம்.எல்.ஏ வை ஊழல் தடுப்பு பிரிவு கைது செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து