முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவை விமர்சித்தவருக்கு சிறை

திங்கட்கிழமை, 6 ஜூலை 2015      உலகம்
Image Unavailable

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் தந்தை என்று அறியப்படும் லீ குவான் யூவை விமர்சனம் செய்ததாக 16 வயது இளைஞருக்கு 4 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

16 வயதான அமொஸ் யீ என்பவர் சிங்கப்பூரை நிறுவியத் தலைவர் என்று அழைக்கப்படும் லீ குவான் யூ அவர்களை விமர்சிக்கும் வீடியோ ஒன்றை இணையத்தளத்தில் பிரசுரித்திருந்தார். அத்துடன், லீ அவர்கள் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சருடன் பாலியல் உறவு கொள்வதைப் போன்று மாற்றயமைக்கப்பட்ட படம் ஒன்றையும் அவர் இணையதளத்தில் பிரசுரித்திருந்தார்.

லீ குவான் யூ மரணமடைந்த பிறகு அவருக்கு சிங்கப்பூர் மக்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த நேரத்தில் அந்தப் படங்களை அவர் பிரசுரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 4 வாரம் சிறை தண்டனை விதித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து