முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரீஸ் நாட்டில் தொடரும் நிதி நெருக்கடி

செவ்வாய்க்கிழமை, 7 ஜூலை 2015      உலகம்
Image Unavailable

ஏதேன்: கிரீஸ் நாட்டு நிதி நெருக்கடி தொடர்பாக ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் உச்சி மாநாட்டில் சந்தித்து பேசுவுள்ளனர். இதில் கிரீஸ் பிரதமர் புதிய திட்டங்களை அறிவிப்பார் என்று தெரிகிறது.  கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கிரீஸை கடனில் இருந்து மீட்க ஐரோப்பிய யூனியன், ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வ தேச நிதியம் ஆகியவை பரிந்துரைத்த கடன் மீட்புத் திட்டத்தை அந்நாட்டு மக்கள் பொதுவாக்கெடுப்பின் மூலம் நிராகரித்தனர்.

உச்சி மாநாட்டில் கிரீஸ் மக்களின் உணர்வுகளை மதித்து அதற்கு கூடுதலாக நிதி உதவி அளிப்பது பற்றி ஆலோசனை நடத்தப்படும் என்று நம்பப்படுகிறது. மறுபுறம், ஐரோப்பிய மத்திய வங்கி கிரீஸ் நாடு தங்களிடம் வாங்கிய 350 கோடி யூரோ கடன் தொகையை வருகிற 20–ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் இல்லை என்றால், அவசர கால கடன் உதவியை ரத்து செய்ய வேண்டிய சூழல் உள்ளதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.  கடன் சுமையால் கிரீஸ் மக்கள் வங்கிகள் பணமின்றி மிகவும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். ஐரோப்பிய மத்திய வங்கியின் அவசர கால கடன் உதவியும் நிறுத்தப்பட்டால், கிரீஸின் சூழல் முற்றிலும் மோசமடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து