முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஸ்தூரி ராஜா மீது நடவடிக்கை எடுக்ககோரி தொடரப்பட்ட வழக்கில் நடிகர் ரஜினி காந்த் பதில் மனு தாக்கல்

புதன்கிழமை, 8 ஜூலை 2015      சினிமா
Image Unavailable

சென்னை, கஸ்தூரி ராஜா மீது நடவடிக்கை எடுக்ககோரி தொடரப்பட்ட வழக்கில், நடிகர் ரஜினி காந்த் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கெட்ட எண்ணத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும், அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ரஜினி தெரிவித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த எஸ்.முகுன்சந்த் போத்ரா, ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

சினிமா இயக்குனர் கஸ்தூரிராஜா, கடந்த 2012-ம் ஆண்டு என்னிடம் ரூ.65 லட்சம் கடன் வாங்கினார். அப்போது, தன் மகன் தனுஷ், நடிகர் ரஜினிகாந்தின் மகளை திருமணம் செய்துள்ளார். எனவே, நான் பணம் தரவில்லையென்றாலும், என் சம்பந்தி கொடுத்து விடுவார் என்று எழுதிக் கொடுத்து பணத்தை வாங்கினார்.

பின்னர், கடன் தொகையை காசோலையாக திருப்பிக் கொடுத்தார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது கஸ்தூரிராஜாவின் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இதையடுத்து அவர் மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தேன். பின்னர், ரஜினிகாந்த் வீட்டை தொடர்பு கொண்டு கேட்டபோது, “பல பேர் ரஜினிகாந்த் பெயரை தவறாக பயன்படுத்துகின்றனர் என்று பதில் வந்தது. 

இதனால்,  2012-ம் ஆண்டு ரஜினிகாந்தின் பெயரை சொல்லி பணம் வாங்கி மோசடி செய்து விட்டார் என்று கஸ்தூரிராஜாவுக்கு எதிராக போலீசில் புகார் செய்தேன். என் புகாரை விசாரித்த போலீசார், இது சிவில் பிரச்சினை என்று கூறி புகாரை முடித்து வைத்து விட்டனர்.

இதற்கிøயில், மேன் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற இந்தி படத்துக்கு தடை கேட்டு இந்த ஐகோர்ட்டில் ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்தபோது, அந்த வழக்கில் நானும் மனு தாக்கல் செய்தேன். அப்போது, ரஜினிகாந்த் தாக்கல் செய்த பதில் மனுவில், “தன் பெயரை பயன்படுத்த யாருக்கும் அனுமதி வழங்கவில்லை என்று கூறியிருந்தார். இந்த பதிலை முன்பே அவர் தெரிவித்து இருந்தால், கஸ்தூரிராஜா மீது நான்  கொடுத்த புகாரை சிவில் பிரச்சினை என்று போலீசார் கூறியிருக்க மாட்டார்கள்.

மேலும், இதுவரை கஸ்தூரிராஜா மீது ரஜினிகாந்த் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார். இதனால், ரஜினிகாந்தும், கஸ்தூரிராஜாவும் கூட்டுச் சேர்ந்து செயல்படுகின்றனரோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்திய தன் சம்பந்தி கஸ்தூரிராஜா மீது நடவடிக்கை எடுக்க ரஜினிகாந்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ரவிசந்திரபாபு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது ரஜினிகாந்த் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

முகுன் சந்த் போத்ரா தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும். இந்த வழக்கை கெட்ட எண்ணத்துடன் எனக்கு எதிராக போத்ரா தாக்கல் செய்துள்ளார். என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும், என்னிடம் பணம் பறிக்கவும் அவர் முயற்சிக்கிறார். அவருடன் எனக்கு எந்த வகையிலும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. கடன் வாங்க நான் உத்தரவாதம் எதுவும், யாருக்கும் அளிக்கவில்லை. கஸ்தூரி ராஜா மீது நான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். இப்படிப்பட்ட கோரிக்கையுடன் வழக்கை தாக்கல் செய்ய முடியாது. இதுபோன்ற வழக்கை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். மனுதாரருக்கு அபராதமும் விதிக்க வேண்டும்.

கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக மனுதாரர் தொடர்ந்த செக் மோசடி வழக்கை ஏற்கனவே ஜார்ஜ் டவுண் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. எனவே, வேண்டுமென்றே எனக்கு எதிராக இந்த வழக்கை மனுதாரர் தொடர்ந்துள்ளார். இதனால், என்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இந்த மனுவுக்கு உடனடியாக போத்ரா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து