முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை விமான நிலையத்தில் 1.25 கோடி மதிப்பு தங்க பிஸ்கட்டு பறிமுதல்

புதன்கிழமை, 8 ஜூலை 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை, சென்னை ஏர்போர்ட்டில் தங்க வேட்டை தொடர்கிறது. நேற்று துபாய் மற்றும் தாய்லாந்திலிருந்து ரூ.1.25 கோடி மதிப்பில் கடத்தி வரப்பட்ட தங்க பிஸ்கட்டை சுங்கதுறையினர் பறிமுதல் செய்தனர்.

கடந்த ஒரு வாரத்தில் 6.5 கிலோ அளவிற்கு தங்க பிஸ்கட் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. துபாயிலிருந்து இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு ஏர்இந்தியா விமானம் வந்திறங்கியது. அதில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் உள்ளாட்டு சேவையாக மும்பைக்கு செல்ல தயாரானது. விமானத்தை சோதனை செய்த அதிகாரிகள் 5 எஃப் இருக்கைக்கு கீழ் ஒரு பார்சல்மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதை கைப்பற்றிய அதிகாரிகள் பிரித்து பார்த்த போது தங்க பிஸ்கட்டுகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ. 1 கோடி ஆகும். உடனடியாக பயணிகள் வெளியே செல்லும் பிரிவுக்கு விரைந்து சென்ற சுங்கதுறை அதிகாரிகள் அந்த இருக்கையில் பயணம் செய்த ஷபி என்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.அதிகாரிகளுடைய விசாரணை யில் அவர் கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டார். தன்னிடம் இந்த பார்சலை கொடுத்தவர்கள் சென்னை வந்ததும் பார்சலை இருக்கைக்கு கீழே வைத்து விட்டு என்னை இறங்கி சென்று விட சொன்னார்கள். மும்பைக்கு செல்லும் அந்த விமானத்தில் வேறொருவர் பயணம் செய்வார். அவர் அதை மும்பைக்கு எடுத்து சென்றுவிடுவார் என்ற உண்மையை அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார்.

ஷபி சொன்ன தகவலை அடுத்து மும்பைக்கு அந்த இருக்கையில் பயணம் செய்ய இருந்தவர் யார் என்பது குறித்தும் துபாயில் இருந்து தங்க பிஸ்கட்களை அனுப்பியவர் குறித்தும் சுங்கதுறை அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே தாய்லாந்தில் இருந்து நேற்று காலை சென்னை வந்த விமானத்தில் பெண் பயணி ஒருவர் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள 750 கிராம் தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்து எடுத்து வந்தார். சோதனையின் போது சுங்கதுறை அதிகாரிகள் அந்த பிஸ்கட்டுகளை பறிமுதல் செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

நேற்று மட்டும் 1.25 கோடி மதிப்பு தங்க பிஸ்கட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 6.5 கோடி மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகளை சுங்கதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து