முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் சட்டசபை தேர்தல்: 100 நாளில் 1 லட்சம் கூட்டம் நடத்த நிதீஷ்குமார் முடிவு

வியாழக்கிழமை, 9 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

பாட்னா - பீகார் சட்டசபை தேர்தலில் 100 நாளில் 1 லட்சம் கூட்டம் நடத்த நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளார். பீகார் சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. முதல்வர் நிதிஷ்குமாரின் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், லல்லு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையில் ஒரு அணியும் உருவாகிறது. பாஜாவின் பிரசாரத்தை முறியடிக்க நிதிஷ்குமாரும், ஐக்கிய ஜனதா தளத்தின் பிரசாரத்தை முறியடிக்க பாஜாவும் போட்டிபோட்டு  வியூகம் வகுத்து செயல்படுகிறார்கள்.

நிதிஷ்குமார் வீடு வீடாக சென்று மக்கலை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டமுடிவு செய்துள்ளார். 1கோடி மக்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்கிறார். மக்களை சந்திக்கும் பிரசாரத்தை நிதிஷ்குமார் பாட்னாவில் ஏற்கெனவே தொடங்கி விட்டார். தொடர்ந்து அவர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நிதிஷ்குமார் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டும் பிரசாரத்துக்கு சாரட் வண்டிகளையும், ரதங்கள் போன்ற வாகனங்களையும் பயன் படுத்த முடிவு செய்துள்ளார். இதே போல் பாஜஜவும் சாரட் வண்டிகளிலும், ரதங்களிலும் சென்று பிரசாரம் செய்கிறது.

முதல் கட்ட தலைவர்கள், அடுத்த கட்ட தலைவர்கள் என இரு பிரிவாக ரதங்களில் பிரசாரம் செய்கிறார்கள். சாரட் வண்டிகள் ரதங்களில் சென்று பிரசாரம் செய்யும் முதல்வர் நிதிஷ்குமார் மாநிலம் முழுவதும் 100 நாட்களில் 1 லட்சம் கூட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளார். இதற்கிடையே நிதிஷ்குமார் அரசு அதிகாரிகள் மூலம் எதிர்க் கட்சிகளின் பிரசார போஸ் டர்கள், போர்டுகள், கட் அவுட்கள் வைக்க விடாமல் தடுப்பதாக பாஜ குற்றம் சாட்டி உள்ளது.

பிரசார போஸ்டர்கள், பேனர்கள் வைக்க விடாமல் அனைத்து இடங்களையும் ஆளும் கட்சியினர் ஆக்கிரமித்துக் கொண்டதாகவும், இது தொடர்பாக உள்ளூர் போலீஸ் அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரி உத்தரவிட்டு இருப்பதாகவும் பாஜ தலைவர் சுஷில்குமார் மோடி புகார் கூறினார். அவர் மேலும் கூறுகையில், பீகார் தேர்தலில் பிரதமர் மோடியின் பிரசாரம் கட்சிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து