முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என் மகன் சிம்புவை ஒழிக்க சதி நடப்பதாக டி.ராஜேந்தர் பரபரப்பு பேட்டி

வியாழக்கிழமை, 9 ஜூலை 2015      சினிமா
Image Unavailable

சென்னை: ‘என் மகன் சிம்புவை ஒழிக்க  சதி நடப்பதாக’ இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர் பரபரப்பு பேட்டி அளித்தார். மேலும் தற்போது சினிமாவில் மறைமுக அரசியல் நடப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வாலு படம் வருகிற ஜுலை 17-ந்தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தை வெளியிடும் மற்றொரு நிறுவனமான மேஜிக் ரேஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்து எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக, இப்படத்தை வெளியிடும் உரிமையை பெற்றுள்ள சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பாக நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் பத்திரிகைகளுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நான் இப்படத்தின் விளம்பரத்தை ஜூன் 19-ந்தேதி முதல் விளம்பரப்படுத்தி வருகிறேன். அன்றைய தினம் முதல் இந்த விளம்பரங்களில் இடதுபுறத்தில் நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் பெயரையும், வலது புறத்தில் மேஜிக் ரேஸ் நிறுவனத்தின் பெயரையும், நடுவில் எனது நிறுவனமான சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் பெயரையும் பயன்படுத்தி வருகிறேன். மேலும், தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் மேஜிக் ரேஸ் நிறுவனத்தின் பெயரை நான் விளம்பரங்களில் பயன்படுத்தி வருகிறேன். இவ்வளவு நாள் வழக்கு தொடராமல், வெளியீட்டு தேதி நெருங்கும் சமயத்தில் அவர்கள் வழக்கு தொடர காரணம் என்ன?  அவர்கள் இந்த படத்தின் உரிமையை கொண்டாட நினைக்கிறார்களா? அல்லது இப்படத்தை நாங்கள் வெளியிடுவதை தடுக்க நினைக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் பேசும்போது, நேற்று நீதிமன்றத்தில் மேஜிக் ரேஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. நிக் ஆர்ட்ஸ் தனது பதில் மனுவை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கிறது. உடனே, நீதிமன்றம் இந்த வழக்கு இதே நிலையிலேயே நீடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கிறது.  ஆனால், இதை சில மீடியாக்கள் படத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு விட்டது என்று வெளியிட்டு விட்டன. நீதிமன்றம் எந்த இடத்திலும் படத்திற்கு இடைக்காலத் தடை என்பதை கூறவில்லை. இதைவிடுத்து, மீடியாக்கள் இதுபோல் படத்திற்கு இடைக்கால தடை என்று கூறினால், அது கோர்ட் அவமதிப்பு வழக்காக ஆகிவிடாதா? இதுமாதிரி செய்திகள் வெளிவந்தது எனது மனதை ரொம்பவும் காயப்படுத்தி விட்டது.

இந்த வழக்கு மீண்டும் வருகிற 13-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது நீதிமன்றம் இந்த படத்திற்கு என்ன தீர்ப்பு வழங்கினாலும் அதற்கு நான் தலை வணங்குகிறேன்.என்னுடைய மகன் சிம்பு நடிப்பில் 3 வருடத்திற்கு பிறகு படம் வந்தாலும் அவருடைய ரசிகர்கள் இன்னமும் சிம்புவுக்கு பெரிய வரவேற்பு கொடுக்க தயாராக இருக்கிறார்கள். இதுதான் நாங்கள் சேர்த்த சொத்து. இதுபோதும். என்னுடைய மகனுக்கு எதிராக சதிச்செயல் நடைபெற்று வருகிறது. அவரை ஒழிக்க நினைக்கிறார்கள்.  அரசியல் தலையீடு இல்லாவிட்டாலும் சினிமாவில் மறைமுக அரசியல் நடந்து வருகிறது. என் மகனுக்காக இந்த படத்தை நான் வெளியிட முன்வந்துள்ளேன். மற்றபடி நான் சாதாரண மனிதன்தான். இந்த பிரச்சினையில் விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளும் எங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர்.அவர்களுக்கு நன்றி என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து