முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம்பிள்டன் டென்னிஸ்: ஷரபோவாவை வீழ்த்தி செரீனா இறுதிக்கு தகுதி

வெள்ளிக்கிழமை, 10 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

லண்டன், விம்பிள்டன் அரையிறுதிப்போட்டியில் ரஷ்ய வீராங்கனை மரிய ஷரபோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றன விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ், மரிய ஷரபோவாவை எதிர்கொண்டார். ஆட்டத்தின் துவக்கம் முதலே தன் சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்தினார் செரீனா. ஒரு மணி நேரம் 18 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், செரீனா, 6-2, 6-4 என்ற நேர்செட்களில் எளிதாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இது ஷரபோவாவுக்கு எதிராக செரீனா பெறும் 18 வது வெற்றியாகும்.

இறுதிப் போட்டியில் செரீனாவுடன் தரவரிசையில் 20 வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீராங்கனை கார்பைன் முகுருசா மோத உள்ளார்.
விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. முன் நடைப்பெற்ற கலப்பு இரட்டையர் காலிறுதி ஆட்டத்தில் லியாண்டர் பயஸ், சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, மெட்கோஸ்கி-வெட்னினா ஜோடியை எதிர்கொண்டது.இப்போட்டியில் 6-2, 6-1 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதியில் நுழைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து