விம்பிள்டன் டென்னிஸ்: ஆடவர் ஒற்றையர் இறுதியில் ரோஜர் பெடரர் - ஜோகோவிச் மோதல்

சனிக்கிழமை, 11 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

லண்டன் - விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் ஆண்டி முர்ரேயை 7-5, 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்திய ரோஜர் பெடரர், இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச்சைச் சந்திக்கிறார்.  2-வது செட்டில் 4-5 என்ற நிலையில் முர்ரே சர்வ் செய்த போது 15 நிமிடங்கள் அந்த சர்வ் கேம் நீண்டது. இதில் பெடரர் சார்பாக இருந்த 5 செட் பாயிண்ட்களை முர்ரே போராடி முறியடித்தார். கடைசியில் ஒரு ஏஸ் வின்னரையும் அடித்தார். 

5-5 என்று ஆனது, பெடரர் தனது சர்வை ஒரு புள்ளி கூட முர்ரேவுக்கு விட்டுக் கொடுக்காமல் சடுதியில் முடித்து 6-5 என்று முன்னிலை பெற, நீண்ட சர்வ் கேமை ஆடிய முர்ரேயிடம் உடனடியாக முக்கிய சர்வ் வந்தது. ஆனால் முர்ரேவுக்கு தனது சாதுரியம் மற்றும் ஆக்ரோஷம் கலந்த டென்னிஸ் ஆட்டத்தைக் காண்பித்த பெடரர் செட்டைக் கைப்பற்றினார்.

3-வது செட்டில் 5-4 என்று முன்னிலை பெற்ற பெடரர் 6-4 என்று கைப்பற்றினார்.  மற்றொரு அரையிறுதி போட்டியில் ஜோகோவிச் 7-6 (2), 6-4, 6-4 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 21-வது இடத்தில் இருந்த பிரான்ஸின் ரிச்சர்ட் காஸ்கட்டை தோற்கடித்தார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த ஜோடி தங்களின் அரையிறுதியில் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ராகேல் கோப்ஸ்-அபிகெய்ல் ஸ்பியர்ஸ் ஜோடியைத் தோற்கடித்தது.

Annai Akilandeswari Thiru Kovil Varalaaru | அன்னை அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் வரலாறு | #Akilandeswari

Health mix for babies | Mixed Nuts Powder | Protein powder for kids

Egg Malai Masala | Easy step by step recipe

Chicken Chukka Chettinad Style | How to make Chicken Curry | செட்டினாட் சிக்கன் சுக்கா

Easy Wheat Biscuit recipe | Crispy & Crunchy Snacks | Ladies Glitz

Chicken 65 recipe | Authentic Indian recipes | Ladies Glitz

Vegetable Cutlet | Crunchy & Crispy Recipe by Ladies Glitz

Chocolate Milkshake | Banana Milkshake | Easy & yummy tasting milkshake recipes

Easy art & craft using Egg shells & Newspaper | Art from waste material to useful | Home decor ideas

Chapathi Veg Roll | Kids Veg Wrap | Ladies Glitz

Easy idli podi recipe | Idli milagai podi in tamil | இட்லி பொடி | Milagai podi recipe

Snack ideas for children | கடலைமாவு முட்டை ஆம்லெட் | Everyday snacks recipe -1

Ghee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து