முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூனியர் விம்பிள்டன் டென்னிஸ்: சுமித் நாகல் சாம்பியன்

செவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

லண்டன்: ஜூனியர் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல்-வியட்நாமின் நாம் ஹாங் லீ ஜோடி 7-6 (4), 6-4 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஓபேல்கா-ஜப்பானின் அகிரா சான்டிலன் ஜோடி யைத் தோற்கடித்து சாம்பியன் ஆனது. ஜூனியர் கிராண்ட்ஸ்லாமில் பட்டம் வென்ற 6-வது இந்தியர் சுமித் நாகல் ஆவார்.  6 ஆண்டுகளுக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டியின் ஜூனியர் பிரிவில் பட்டம் வென்ற இந்தியர் என்ற பெருமையைப் பெற் றுள்ளார் நாகல். இதற்கு முன்னர் 2009-ல் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் ஜூனியர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி சாம்பியன் பட்டம் வென்றார்.

ராமநாதன் கிருஷ்ணன் (விம்பிள்டன் 1954), ரமேஷ் கிருஷ்ணன் (பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் 1979), லியாண்டர் பயஸ் (விம்பிள்டன் 1990, அமெரிக்க ஓபன் 1991), சானியா மிர்சா (2009 விம்பிள்டன் இரட்டையர் பிரிவு) ஆகியோர் ஜூனியர் பிரிவு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வென்ற மற்ற இந்தியர்கள் ஆவர்.  வெற்றி குறித்துப் பேசிய 17 வயது நாகல், “விம்பிள்டனில் பட்டம் வென்றிருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை. மிகப்பெரிய மற்றும் மிகப்பழமையான விம்பிள்டன் போட்டியில் சாம்பியனாகியிருப்பது மிகச்சிறப்பானதாகும். விம்பிள்டனில் சாம்பியன் ஆவேன் என கற்பனையிலும் நினைத்ததில்லை” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து