முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆடி மாதத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 108 அம்மன் கோவிலுக்கு சுற்றுலா

புதன்கிழமை, 15 ஜூலை 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஆடி மாதத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 108 அம்மன் கோவில்களுக்கு 5 நாள் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்து உள்ளது.

சென்னை, பாண்டிச்சேரி, மேல்மருவத்தூர், சிதம்பரம், நாகப்பட்டினம், திருவாரூர், மாயவரம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் தரிசனம் செய்யலாம்.

பிரதி வாரம் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சென்னையில் இருந்து புறப்பட்டு ஐந்தாம் நாள் இரவு சென்னை வந்தடையும். சுற்றுலா பயணிகள் முதல் நாள் சிதம்பரத்தில் தங்க வைக்கப்படுகிறார்கள். 2–வது நாள் தஞ்சாவூர் (ஓட்டல் தமிழ்நாடு), 3–வது நாள் மதுரை, 4–வது நாள் திருச்சியில் வைக்கப்பட்டு, 5–வது நாள் சென்னை வந்தடைவார்கள்.

சுற்றுலா கட்டணமாக நபருக்கு (இருவர் தங்கும் வசதியுடன்) ரூ. 5 ஆயிரத்து 500 வசூலிக்கப்படுகிறது. சிறுவருக்கு (4 வயது முதல் 10 வயது வரை) ரூ.4 ஆயிரத்து 900 ரூபாயும், தனி நபருக்கு, தனி அறை வசதியுடன் (இதில் சொகுசு பேருந்து தங்கும் வசதி மட்டும் உட்பட்டது) ரூ.6 ஆயிரத்து 500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

மேலும் விவரங்களுக்கு 044 – 2533 3444, 2533 3333, 2533 3857, 2533 3286 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது கண்டனமில்லாத தொலைபேசி எண் 1800 4253 1111–ல் தொடர்பு கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து