முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயணிகள் போல் டிக்கெட் எடுத்து விமானத்தில் பயணம் செய்த ஏழுமலையான் சிலை

வியாழக்கிழமை, 16 ஜூலை 2015      ஆன்மிகம்
Image Unavailable

நகரி -  அமெரிக்காவில் டெல்லாஸ் நகரில் ஸ்ரீனிவாச கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வெங்கடாசலபதியின் பஞ்சலோக சிலை, புதிதாக வடிவமைத்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது. 3 சிலைகளும் பெட்டியில் பார்சல் செய்து லக்கேஜ் கட்டணத்தில் வாஷிங்டன் அனுப்பி வைக்கப்பட்டது. வாஷிங்கடனில் லோட்டஸ் கோவிலில் இந்த சிலைகளுக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் டெல்லாஸ் நகருக்கு அனுப்பு வேண்டும்.

காரில் பயணம் செய்தால் டெல்லாஸ் நகருக்கு செல்ல 24 மணி நேரம் ஆகும். விமானத்தில் சென்றால்தான் 12ம் தேதி நடக்கும் ஸ்ரீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சியை நடத்த முடியும். பிராண பிரதிஷ்டை செய்த சிலையை மீண்டும் பெட்டியில் அடைத்து விமானத்தில் அனுப்ப பக்தர்கள் விரும்பவில்லை.

இதனால் வாஷிங்டனில் இருந்து டெல்லாஸ் செல்லும் விமானத்தில் சாதாரண பயணிகள் போல வெங்கடேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதைவி பெயரில் 3 டிக்கெட் எடுக்கப்பட்டது. பயணிகள் போல விமான இருக்கையில் 3 சிலைகளும் வைக்கப்பட்டு டெல்லாஸ் கொண்டு செல்லப்பட்டு திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. விமான வெங்கடேஸ்வரர் என்று அழைக்கப்பட்ட ஏழுமலையான் பெயருக்கு ஏற்றாற்போல விமானத்தில் பயணம் செய்து பரபரப்பாக பேசப்பட்டது. அமெரிக்காவில் 60 ஆயிரம் தெலுங்கு மக்கள் வசிக்கிறார்கள். இதில் 10 ஆயிரம் பேர் ஸ்ரீனிவாச திருக்கல்யாணத்தில் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து