முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகில் தங்கம் அதிகம் வாங்குபவர்கள் பட்டியலில் இந்தியாவுக்கு 2-வது இடம்

வியாழக்கிழமை, 16 ஜூலை 2015      வர்த்தகம்
Image Unavailable

டெல்லி - உலகிலேயே அதிக தங்கம் வாங்குபவர்கள் எண்ணிகையில் இந்தியர்கள் இரண்டாம் இடத்தில் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் உலகின் இரண்டாவது நாடாக விளங்கும் இந்தியாவிலும், சீனாவிலும் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 360 டன் அதாவது 3 லட்சத்து 60 ஆயிரம் கிலோ தங்க நகைகள் விற்பனையாகியுள்ளதாக சர்வதேச தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதில் சீன மக்கள் 213.2 டன் தங்க நகைகளையும், அதற்கு அடுத்தபடியாக இந்தியர்கள் 150.8 டன் தங்க நகைகளையும் இவ்வாண்டின் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மட்டும் வாங்கியுள்ளனர். இதற்கு முந்தைய ஆண்டான 2014 இதே காலகட்டத்தில் சீனர்கள் வாங்கியிருந்த தங்கத்தின் அளவை விட இந்த ஆண்டின் விற்பனை சுமார் 10 சதவீதம் சரிந்தும், இந்தியர்களின் இந்த ஆண்டு கொள்முதல் 22 சதவீதம் உயர்ந்தும் உள்ளதாக இந்த கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனர்கள் மற்றும் இந்தியர்கள் அதிகமாக வாங்கி குவிப்பதால் தங்கத்தின் சர்வதேச சந்தையின் விலையை நிர்ணயிப்பதில் இந்த இரு நாடுகளின் கொள்முதல் திறன் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து