முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் மாநில அளவில் விளையாட்டுப்போட்டிகள்: அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, சுந்தர்ராஜன் தொடங்கி வைத்தனர்.

வெள்ளிக்கிழமை, 17 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

மதுரை, மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநில அளவில் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டிகளை அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, சுந்தர்ராஜன் நேற்று தொடங்கி வைத்தனர்.

மதுரையில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானம் டாக்டர்.எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கத்தில் மாநில அளவிலான பல்கலைக்கழகங்களுக்கிடையேயான தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கபாடி, கையுந்துபந்து, மேசைப்பந்து, டென்னிஸ் மற்றும் இறகுப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் நேற்று துவங்கி வரும் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.  இந்த விளையாட்டுப்போட்டிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜு ,விளையாட்டு மற்றும் இளைஞர்நலத்துறை அமைச்சர் எஸ்.சுந்தர்ராஜன் ஆகியோர், மாவட்ட கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று தொடங்கிவைத்து விழாப்பேருரையாற்றினார்கள்.

      இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ பேசியதாவது: இந்திய திருநாட்டிற்கே வழிகாட்டியாக திகழும்  தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்கள் பள்ளி பருவத்திலேயே உடல் வளத்துடன், பலத்துடனும் இருந்தால் தான் கல்வியில் சிறந்து விளங்க முடியும் என்பதை அடிப்படையாக கொண்டு பள்ளி அளவில், கல்லூரி அளவில், பல்கலைகழகங்கள் அளவில் பயிலும் மாணவ, மாணவியர்களை விளையாட்டில் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறார்கள்.  அதில் ஒரு திட்டமாக மாநில அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டியினை நடத்திட  தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.  இந்த நல்ல வாய்ப்பினை மாணவ, மாணவியர்கள் பயன்படுத்திக் கொண்டு கல்வியோடு இணைந்து விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில்  விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சுந்தர்ராஜன் பேசியதாவது,  தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் தேசிய அளவில், உலக அளவில் மாணவ, மாணவியர்கள் விளையாட்டில் பங்கேற்க வேணடும் என்பதற்காக கல்வித்துறைக்கு இணையாக நிதி ஒதுக்கீடுகளையும், பல்வேறு பயிற்சிகளையும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.  இன்று நடைபெறும் மாநில அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டியில் அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், இந்துஸ்தான் பல்கலைக்கழகம், காருண்யா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதர் தெரசா பல்கலைக்கழகம், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், சத்யபாமா பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், வேல்ஸ் பல்கலைக்கழகம் போன்ற 15 பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்க உள்ளார்கள்.  மாநில அளவிலான பல்கலைக்கழகங்களுக்கான விளையாட்டுப் போட்டியில் நிகர்நிலை பல்கலைக்கழக போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் இரண்டு அணிகளும், மாநிலத்தில் உள்ள மற்ற பல்கலைக்கழகத்தின் அணிகளும் கலந்து கொள்வார்கள். நிகர்நிலைப்பல்கலைக்கழகங்கள் விளையாட்டுப்போட்டிகள் மற்றும் மாநில அளவிலான பல்கலைக்கழகங்களுக்கிடையேயான விளையாட்டுப்போட்டிகள் நடத்திட தொடர் மான்யமாக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   

    மாநில அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப்போட்டிகளில் முதல் இடம் பெறும் விளையாட்டு வீரர்,வீராங்கனைகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும், இரண்டாம் இடம் பெறும் விளையாட்டு வீரர்,வீராங்கனைகளுக்கு தலா ரூ.7500ம், மூன்றாம் இடம் பெறும் விளையாட்டு வீரர்,வீராங்கனைகளுக்கு தலா ரூ.5 ஆயிரமும், ரொக்கப்பரிசாக வழங்கப்படவுள்ளது.  இந்த திட்டத்தின் மூலம் 582 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பரிசுத்தொகையாக மொத்தம் ரூ.43,65,000 - வழங்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
  
 இந்நிகழ்ச்சியில்  தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத்தலைவர் சோலை எம்.ராஜா, தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தலைவர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், மாமன்ற உறுப்பினர்கள் புதூர் அபுதாகீர், ராமன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் துணைப்பொது மேலாளர் ஷாஜு, மண்டல முதுநிலை மேலாளர்கள் தமிழ்செல்வன் (மதுரை), சாந்தன் (சென்னை), மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், மதுரை கபாடி கழக சேர்மன் வல்லரசு, 8 வது வட்ட அம்மா பேரவை செயலாளர் பூமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து