முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் போட்டி முறைகேடு குறித்து லோதா கமிட்டி அறிக்கை இந்திய கிரிக்கெட்வாரியம் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

மும்பை: ஐபிஎல் கிரிகெட்போட்டியில் நடந்த முறைகேடுகளை குறித்து ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் அமைத்தது.இந்த குழுவின் அறிக் கை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) ஆய்வு  செய்கிறது. இக்குழுவின் அறிக் கை குறித்து  ஆய்வு செய்வதற்கு ஒரு செயற்குழுவை அமைக்கிறது.இந்த குழு 6வாரங்களில் தனது பரிந்துரைகளை அளிக்கிறது.

ஐ.பி.எல் போட்டியில் முறைகேடு செய்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 2ஆண்டுகள் ஆடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து இந்திய கிரிக் கெட் வாரியத்தின்  கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.ஐ.பி,.எல் போட்டியில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை செய்வதற்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி லோதா தலைமையிலான கமிஷனை அமைத்தது.அந்த கமிட்டி அளித்த பரிந்துரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன .எனவே அந்த இரண்டு அணிகளும் 2ஆண்டுகளுக்கு ஐ.பி.எல்போட்டியில் ஆடுவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என தனது பரிந்துரையில் தெரிவித்தது.

லோதா கமிஷன் பரிந்துரையை முழுமையாக ஏற்கிறோம். அந்த குழு அளித்துள்ள பரிந்துரையின் முடிவுகளால் ஏற்படும்விளைவுகள் குறித்தும் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. என இந்திய கிரிக் கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோதா  கமிஷனின் பரிந்துரை குறித்து ஆய்வு செய்வதற்கான செயற்குழுவை அமைப்பதற்கு ஐ.பி,எல் தலைவர் ராஜீவ் சுக்லாவிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.இந்த அதிகாரத்தை ஐ.பி.எல் நிர்வாக குழு அளித்திருக்கிறது லோதா  குழு பரிந்துரைகளை ஆய்வு செய்வதற்கு கிரிக் கெட் வாரியத்தின் முக்கிய ஆலோசகர்களின் கருத்தும் கேட்கப்பட்டுள்ளது. நீதிபதி குழு அளித்துள்ள பரிந்துரைகளை அமல் படுத்துவதற்கான அனைத்து வித நடவடிக்கைகளை மேற்கொள்ள  ஐபிஎல் நிர்வாகக்குழு முடிவு செய்துள்ளது.

ஐ.பிஎல்  நியமிக்கும் செயல் குழுவின் பரிந்துரைகள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அதிக அதிகாரம் கொண்ட செயற்குழுவிற்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் போட்டியின் தலைவரான ராஜீவ் சுக்லா கூறுகையில் லோதா கமிஷனின் பரிந்துரைகளை ஆய்வு செய்வது தொடர்பாக அமைக்கப்படும் குழுவின் உறுப்பினர்கள் யார் என்கிற விவரம் இன்று முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இந்திய கிரிக் கெட் வாரியம் நேற்று நடத்திய கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஜக் மோகன் டால்மியா கலந்து கொள்ள வில்லை.அவர் உடல் நலக்குறைவு காரணமாக கலந்து கொள்ள வில்லை என தெரிவிக்கப்பட்டது.இந்திய கிரிக் கெட் வாரியத்தில் உள்ள அஜய் ஷிர்கே, ரவிசாஸ்திரி மற்றும் ஜோதிர் ஆதித்யா சிந்தியா ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் கூட்டத்தில் பேசினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து