முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோதாவரி புஷ்கரம் விழாவில் தினமும் 1 லட்சம் பேருக்கு திருப்பதி தேவஸ்தானம் அன்னதானம்

திங்கட்கிழமை, 20 ஜூலை 2015      ஆன்மிகம்
Image Unavailable

ராஜமுந்திரி - கோதாவரி புஷ்கரம் விழாவில் திமும் 1 லட்சம் பேருக்கு திருப்பதி தேவஸ்தானம் அன்னதானம் வழங்குகிறது.
கோதாவரி நதிபாயும் மாநிலங்களில் கோதாவரி புஷ்கரம் விழா நடந்து வ ருகிறது. இதில் புனித நீராடினால் மகாமகத்தில் புனித நீராடிய சிறப்பை பெறலாம். ஆந்திர மாநிலத்தில் கோதாவரி நதி பாயும் ராஜமுந்திரி பகுதியில் கடந்த 14ம் தேதி கோதாவரி புஷ்கரம் விழா தொடங்கியது. அன்று காலையில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு புஷ்கரம் விழாவை தொடங்கி வைத்தார். அப்போது கூட்ட நெரிசல் ஏர்பட்டதில் 27 பேர் பலியானார்கள், ஆனால் அதற்கு பிறகும் கோதாவரி புஷ்கரம் விழாவுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

இந்தநிலையில், கோதாவரி புஷ்கரம் விழாவில் புனித நீராடி ராஜமுந்திரிக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழஹ்கிட திருப்பதி தேவஸ்தானத்துக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். அதன்படி ராஜமுந்திரிக்கு புனித நீராட வரும் பக்தர்களில் தினமும் 1 லட்சம் பேருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. ராஜமுந்திரியில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நேற்று முதல் 25ம் தேதி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

தினமும் காலை 10 மணி முதல் இடைவிடாமல் இரவு வரை அன்னதானம் வழங்கப்படும். அன்னதானத்தின் போது சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவை பக்தர்களுக்கு வழங்கப்படும். அன்னதானம் வழங்கும் ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ் உத்தரவின் பேரில் இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாச ராஜா பார்வையிட்டார். துணை நிர்வாக அதிகாரி வேணுகோபால் இதற்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து