முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு சென்ற பக்தரிடம் இணையதளத்தில் போலி ரூ.300 டிக்கெட் விற்பனை

திங்கட்கிழமை, 20 ஜூலை 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்திற்கு சென்ற பக்தரிடம் இணையதளத்தில் போலி ரூ.300 டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக உலகம் முழுவதிலும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அதன்படி பக்தர்கள் எவ்வித சிபாரிசு கடிதங்களும் இல்லாமல் நேரடியாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்யும் விதமாக தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தினந்தோறும் 26 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த டிக்கெட்டுகளை ஒருசில தனியார் நிறுவனத்தினர் வியாபாரமாக்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன் தினம் மதியம் ரூ.300க்கான சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் தரிசனவரிசையில் நின்று கொண்டு இருந்தனர். அப்போது சென்னையை சேர்ந்த மனோஜ் ஜெயின் என்பவர் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனத்துக்காக சென்றார். வரிசையில் அவரது தரிசன டிக்கெட் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அந்த டிக்கெட் போலி என தெரிந்தது. இதையடுத்து தேவஸ்தான ஊழியர்கள், அவர் கொண்டு வந்துள்ள டிக்கெட் போலியானது என தெரிவித்து, அவர் குடும்பத்தினரை தரிசனத்துக்கு அனுமதிக்க மறுத்தனர். அவரிடம் எந்த வெப்சைட்டில் டிக்கெட் எடுத்தீர்கள் என்று கேட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மனோஜ் ஜெயின் www.templeyatri.com  என்ற இணையதளத்தில்  முகவரியில் முன்பதிவு செய்ததாகவும் தெரிவித்தார். இதை தொடர்ந்து அதிகாரிகள் அந்த வெப்சைட்டை ஆய்வு செய்த போது அது போலி வெப்சைட் என்பது தெரியவந்தது.  போலி இணையதள முகவரி மூலம் இதுபோன்ற மோசடி நடைபெறுவதை அறிந்த அதிகாரிகள், இனிமேல் தேவஸ்தான இணையதள முகரியான www.ttd-sevaonline.com -ல்  பதிவு செய்து வர வேண்டும் என அவரிடம் தெரிவித்து. பின்னர் தரிசனம் செய்ய அனுமதி அளித்தனர். இது குறித்து தகவல் அறிந்த தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ் உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அந்த வெப்சைட் எங்கிருந்து இயங்குகிறது. அதனை இயக்குபவர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அந்த வெப்சைட்டை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்பவர்கள் www.ttd-sevaonline.com என்ற இணையதளத்தில் டிக்கெட் பதிவு செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர். ஏற்கெனவே திருப்பதி லட்டு மோசடியாக ஆன்லைனில் விற்பனை செய்து 2 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் ரூ.300 தரிசன ஆ்னலைனில் விற்பனை செய்ய பட்டிருப்பது, தேவஸ்தான அதிகாரிகளையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து