முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாங்காக்கில் நடைபெறும் ஆசிய குத்துச்சண்டை போட்டிக்கு சிவா தாப்பா-தேவந்திரோ சிங் தேர்வு

செவ்வாய்க்கிழமை, 21 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி: பாங்காங்கில் ஆசிய குத்துச்சண்டை போட்டிவருகிற ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 6ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் கடந்த ஆண்டு காமன் வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தேவேந்திரோ சிங்கும் நடப்பு ஆசிய குத்துச்சண்டை சாம்பியனுமான சிவா தாப்பாவும்(56கிலோ பிரிவு) இடம் பெற்றனர். காமன் வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மன்தீப் ஜன்கராவும்(69கிலோ பிரிவு) 10பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்றார்.

ஆசிய குத்துச்சண்டை போட்டிக்கான வீரர்கள் தேர்வு இந்த மாதம் 17 மற்றும் 18ம் தேதிகளில் பாட்டியாலாவில் நடைபெற்றது. வீரர்கள் தேர்வு குழு தலைவர் கோபால் தேவாங் தலைமையில் தேர்வு குழுவினர் வீரர்களை தேர்வு செய்தார்கள். குத்துச்சண்டை வீரர் விஜயேந்தர் சிங் அமெச்சூர் போட்டிகளில் இருந்து விலகுவதாகவும் தொழில் முறை வீரராக ஆவதாகவும் தெரிவித்து இருந்தார்.அவரது இடத்தில் இந்திய அணியில் 75கிலோ பிரிவில் முன்னாள் உலக சாம்பியன்போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற வீரர் விகாஸ் கிருஷ்ணன் இடம் பிடித்தார்.

ஆகஸ்ட் மாதம் 24ம் தேதியன்று இந்திய குத்துச்சண்டை அணி பாங்காங்கிற்கு புறப்பட்டு செல்கிறது.அந்த அணி செப்டம் பர் 6ம் தேதியன்று நாடு திரும்புகிறது. இந்திய அணியில் இடம் பெற்றுள்ள குத்துச்சண்டை வீரர்கள் விவரம் வருமாறு, தேவந்திரோ சிங்(49கிலோ பிரிவு) மதன் லால்(52கிலோ பிரிவு) சிவா தாப்பா((56கிலோ பிரிவு) மனீஷ் கவுசிக் (60கிலோ பிரிவு) மனோஜ் குமார்(64கிலோ பிரிவு)மன்தீப் ஜன்கரா(69கிலோ பிரிவு) விகாஸ் கிருஷ்ணன்(75கிலோ பிரிவு) குல்தீப் சிங்(81கிலோ பிரிவு) மன்பிரீத் சிங்(91கிலோபிரிவு) சதீஷ் குமார் (91கிலோ பிரிவுக்கு மேல்) ஆகியோர் ஆவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து