முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: பந்து வீச்சில் முஸ்தபிசுர் ரஹ்மான் அசத்தல்

செவ்வாய்க்கிழமை, 21 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

சிட்டகாங் - சிட்டகாங்கில் நடைபெறும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணிக்காக அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆடும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி தற்போது 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகம் ஆன முஸ்தபிசுர் ரஹ்மான் தற்போது டெஸ்ட் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், முதல் நாளான நேற்று டாஸ் வென்ற ஆம்லா தலைமை தென் ஆப்பிரிக்க அணி பேட் செய்து வருகிறது. 59 ஓவர்கள் முடிவில் 173/3 என்று நல்ல நிலையில் இருந்தது.

அப்போது 60வது ஓவரை வீச இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் வந்தார். முஸ்தபிசுர் ரஹ்மானின் 14-வது ஓவர் அது. ஆம்லா 13 ரன்களில் முஸ்தபிசுர் பந்தை ஆம்லா தனது உடலுக்கு தொலைவில் மட்டையைக் கொண்டு சென்று ஆடினார் அதனால் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸிடம் கேட்ச் ஆனது. 2-வது பந்து ஜே.பி. டுமினி எதிர்கொண்டார். ஃபுல் லெந்த்தில் உள்ளே வந்த பந்து டுமினி கால்காப்பை தாக்கியது. முறையீட்டை நடுவர் மறுக்க, கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் மேல்முறையீடு செய்தார்.

பந்து மட்டையில் படவில்லை என்பது உறுதியானதோடு, லெக் அண்ட் மிடிலுக்கு நேராக டுமினி வாங்கியது தெரியவந்ததால் அவுட் என்று தீர்மானிக்கப்பட்டார். முஸ்தபிசுர் ரஹ்மான் ஹேட்ரிக் வாய்ப்பு பெற்றார். குவிண்டன் டி காக் கடும் நெருக்கடியில் ஸ்டம்புக்கு வந்த பந்தை தடுத்தாடி ஹேட்ரிக்கை முறியடித்தார். ஆனால் அடுத்த பந்தே ஆஃப் ஸ்டம்ப் பறந்தது. தடுப்பாட்டத்தில் குவிண்டன் டி காக் தாமதமாக செயல்பட்டதால் ஆஃப் ஸ்டம்ப் பறந்தது. ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி கலக்கினார் முஸ்தபிசுர் ரஹ்மான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து