முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வளைகுடா நாட்டில் இருந்து குருவாயூர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதன்கிழமை, 22 ஜூலை 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற கோவில் களில் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலும் ஒன்று, தினமும் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள்.  பக்தர்கள் பாதுகாப்புக்காக கோவிலில் 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். குருவாயூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனின் செல்போனுக்கு ஒருவர் பேசினார். ஆங்கிலத்தில் பேசி அவர், குருவாயூர் கோவிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், 24 மணி நேரத்தில் அவை வெடிக்கும் என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து கொண்டார். இத்தகவலை இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார். அவர்கள் உடனே கோவிலுக்கு விரைந்து வந்தனர். மேலும் வெடி குண்டு நிபுணர்கள், மோப்ப நாயும் அழைத்து வரப்பட்டது.

அவர்கள் கோவில் முழுவதும் சல்லடை போட்டு சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை. அதன் பிறகே வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் செல்போன் அழைப்பு வளைகுடா நாட்டில் இருந்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து பேசியது யார்? எதற்காக மிரட்டல் விடுக்கப்பட்டது? என்பது பற்றி குருவாயூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து